பிணத்தின் கழுத்திலிருந்த நகையை திருடிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (09:04 IST)
தேனியில் பிணத்தின் கழுத்திலிருந்த நகையை திருடிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் பணம், பொருள் ஈட்டுவதற்கு கஷ்டப்படுவதை விட தங்களிடம் இருக்கும் பணம் பொருளை பாதுகாப்பதற்கே மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதற்கு முக்கியக் காரணமே அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்கள் தான்.
 
தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் அருகே உள்ள சமையன்தெருவை சேர்ந்த போலீஸ்காரரான அழகுதுரைக்கும் அவரது மனைவி ஜெயமணிக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஜெயமணி தனது 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார்  3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த ஆம்புலன்ஸின் டிரைவர் சிவக்குமார் ஜெயமணியின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை திருடியுள்ளார்.
 
இதனையறிந்த ஜெயமணியின் உறவினர்கள், சிவக்குமாருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஒரு பிணத்தின் கழுத்தில் இருந்த நகையை திருடிய இந்த கேடு கெட்ட ஜென்மத்தை என்ன சொல்லி திட்டுவது என்றே தெரியவில்லை...

சாமி 2: திரைவிமர்சனம்

குழந்தைகளுக்காக பார்க்கிறோம்..இல்லையேல்? - லலித்குமார் சகோதரர் எச்சரிக்கை

மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு ஏன்? தம்பிதுரை விளக்கம்

எங்கு செல்வதென தெரியவில்லை : பத்திரிக்கையாளர்களிடம் சரணடைந்த வனிதா விஜயகுமார்

பொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி

தொடர்புடைய செய்திகள்

நானும் பாதிக்கப்பட்டேன் : அம்ருதாவுக்கு ஆறுதல் கூறிய கௌசல்யா

சொந்த செலவில் சூனியம்: அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த டிரம்ப்

மீண்டும் எகிறியது பெட்ரோல் – டீசல் விலை

பொளேர் என இன்ஸ்பெக்டர் அறைந்தார் - வனிதா விஜயகுமார் பேட்டி

மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு ஏன்? தம்பிதுரை விளக்கம்

அடுத்த கட்டுரையில்