புதுச்சேரி எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு - நாராயணசாமி உறுதி

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (12:02 IST)
புதுச்சேரியில் உள்ள சட்ட மன்ற கட்டிடத்தில்  நேற்று எம்.எல்.ஏக்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி  தலைமை தாங்கினார்.

 
அப்போது கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏக்கள் அனைவரும் தமிழகத்தைப் போன்று புதுசேரி எம்.எல்.ஏக்களுக்கும் சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். அத்துடன் எம்.எல்.ஏக்களுக்கு என்று தனி வாகன ஓட்டுனர் மற்றும், உதவியாளர் நியமிக்க வேண்டும். சென்ற முறை போன்று மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தங்கள் கோரிக்கைகளை வலுவாக முன் வைத்தனர்.
 
எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளைக் செவிசாய்த்துக்  கேட்ட நாராயணசாமி இது தொடர்பாக குளிர்காலக் கூட்டத்தொடரில் முடிவு எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏக்களுக்கு உறுதியளித்தார். தற்போது பாண்டிச்சேரி எம்.எல்.ஏக்கள் பல்வேறு படிகளுடன் சேர்த்து ரூ.48 ஆயிரம் சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது. 

என்ஜீனியரிங் மாணவியுடன் உல்லாசம்: பட்டதாரி வாலிபர் கைது

விருந்துக்கு சென்று விருந்தாகிய இளம்பெண்: அயோக்கியனின் வெறிச்செயல்

ஆசிரியையின் அந்தரங்கத்தை படமெடுத்து மிரட்டிய மாணவன்: திருச்சியில் பெரும் பரபரப்பு

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலைப் பாடும் ஏழைப்பெண் பேபி...

விஷால் தான் 'தமிழ் ராக்கர்ஸ்' உரிமையாளரா? சுரேஷ் காமாட்சி அதிர்ச்சி குற்றச்சாட்டு

தொடர்புடைய செய்திகள்

காலதாமதமாகும் 'கஜா' புயல்: நள்ளிரவுக்கு பின்னரே கரையை கடக்கும்

காலதாமதமாகும் 'கஜா' புயல்: நள்ளிரவுக்கு பின்னரே கரையை கடக்கும்

பெரியார் பாடத்தை படிக்கும் குழந்தைகள் ஒழுக்கமாக இருப்பார்களா? எச்.ராஜா

சென்னை கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

120 கிமீ வேகம்... வர்தா புயலுக்கு இணையாக மாறுகிறது கஜா புயல்

அடுத்த கட்டுரையில்