பெட்ரோல் நிரப்பினால் பைக் இலவசம்; விற்பனையை அதிகரிக்க பங்க் உரிமையாளர்கள் நூதன விளம்பரம்

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (15:01 IST)
பெட்ரோல், டீசல் இந்தியாவிலே அதிக விலையில் விற்பனை செய்யப்படும் மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் விற்பனையை அதிகரிக்க பங்க உரிமையாளர்கள் நூதனமான முறையில் விளம்பரம் செய்து வருகின்றனர்.

 
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
ஆனால் மத்திய அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வரிக்கு ஏற்ப பெட்ரோல். டீசல் விலை ஒவ்வொரு மாநிலத்துக்கு வேறுபடுகிறது. இந்தியாவிலே மத்தியப்பிரதேச மாநிலத்தில்தான் அதிக அளவில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
 
இதனால் மத்தியப்பிரதேச மாநிலத்தை கடந்து செல்லும் பெரும்பாலான லாரிகள் அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் நிரப்புதை தவிர்த்து வருகின்றனர். அதேபோன்று மத்தியப்பிரதேச எல்லைப்பகுதிகளில் வாழும் மக்கள் பிற மாநிலங்களுக்கு சென்று பெட்ரோல், டீசல் நிரப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநில பங்க உரிமையாளர்கள் நூதன முறையில் விளம்பரம் செய்துள்ளனர். பெட்ரோல், டீசல் நிரப்புவர்கள் இலவசங்கள் வழங்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-
 
100 லிட்டர் பெட்ரோல் நிரப்பினால் டிரைவருக்கு உணவும், தேனீரும் இலவசமாக வழங்கப்படும். 5 ஆயிரம் லிட்டர் நிரப்பினால் சைக்கிள் வழங்கப்படும். 50 ஆயிரம் லிட்டர் நிரப்பினால் ஏசி அல்லது லேப்டாப் வழங்கப்படும். அதிகப்பட்சமாக 1 லட்சம் லிட்டர் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான் வாட் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பங்க் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான் வாட் வரியை குறைத்தன் மூலம் அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது.

3 மாதங்களுக்கு 300 ஜிபி ஃப்ரீ: ஜியோ பிரீவியூ சலுகை!

பேஸ்புக்கின் டேட்டிங் சேவை அறிமுகம் - எப்படி செயல்படுகிறது?

முத்தம் கூட கொடுக்கத் தெரியாதா? கணவனின் நாக்கை கடித்துத் துப்பிய மனைவி

24 லட்சத்தை தாண்டிவிட்ட ரித்விகா: டைட்டில் உறுதியாகிறது.

முதல் பட சம்பளத்தை முதலமைச்சரிடம் கொடுத்த விக்ரம் மகன்

தொடர்புடைய செய்திகள்

ராகுல்காந்தி தான் ஹீரோ, நாங்கள் எல்லாம் ஜீரோ: முதலமைச்சர்

எஸ்.வி.சேகர் சொன்னதை காமெடியாக எடுத்து கொள்ளுங்கள்: தமிழிசை

எஸ்.வி.சேகர் சொன்னதை காமெடியாக எடுத்து கொள்ளுங்கள்: தமிழிசை

டும் டும் டும்…நல்ல காலம் பொறக்குது: அமைச்சர் சுப்ரிம் கோர்ட்டில் மனு...

5000 கோடி மோசடி- குஜராத் தொழிலதிபர் துபாயிலிருந்து நைஜீரியாவுக்கு தப்பியோட்டம்

அடுத்த கட்டுரையில்