Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவி லைவ் ஷோவின் போது பெண் எழுத்தாளர் மாரடைப்பால் மரணம்

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (09:48 IST)
காஷ்மீரில் பெண் எழுத்தாளர் ஒருவர் டிவி லைவ் ஷோவின் போது மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் பிரபல எழுத்தாளரான ரீட்டா ஜிஜேந்திரா காஷ்மீரில் நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து டிவி சேனல் நடத்திய லைவ் ஷோவில் கலந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் பல சுவாரஸ்ய தகவல்களை சொல்லிக்கொண்டிருந்தார்.
 
நிகழ்ச்சி ரொம்ப விறுவிறுப்பாக போய்கொண்டிருந்த வேளையில் ரீட்டாவின் பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது. நிலைமை என்னவென்று புரிந்து கொள்வதற்குள்ளேயே ரீட்டா மயங்கி விழுந்தார். உடனடியாக ரீட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இவரது இறப்புச்செய்தி காஷ்மீர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பன்முகத் திறமை கொண்ட இவரின் மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments