வாயை விட்டு மாட்டிக்கொண்ட உச்ச நட்சத்திரத்தின் மகள்

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (18:33 IST)
தேவையில்லாமல் ட்வீட் செய்து உச்ச நட்சத்திரத்தின் மகள் மாட்டிக் கொண்டார்.
 
உச்ச நட்சத்திரம் நடித்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. ஆனால், அவரோ தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க இன்றே டேராடூன் கிளம்பிச் சென்றுவிட்டார். சூரிய நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஒல்லி இசையமைப்பாளர் இசையமைக்கிறார். சைலண்ட் த்ரில்லர் படத்தை இயக்கியவர், இந்தப் படத்தை இயக்குகிறார்.
 
உச்ச நட்சத்திரம் இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காக விமான நிலையம் செல்ல வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவருடைய இளைய மகள், ‘தலைவர் அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி விட்டார். மல்ட்டிபிள் ரோல்ஸ்’ என்று ட்விட்டரில் பதிவிட்டார்.
 
உடனே, ‘படத்தில் எத்தனை வேடங்கள்?’ என்று கேட்டு பல ட்வீட்டுகள் அவருக்கு குவிந்தன. இது தயாரிப்பு நிறுவனத்தின் காதுக்குப் போக, நேரடியாக உச்ச நட்சத்திரத்துக்கே போன் போட்டு காய்ச்சி எடுத்து விட்டார்களாம். அவர் மகளிடம் புலம்ப, ‘வேடங்கள் என்று தலைவரின் வாழ்க்கையைச் சொன்னேன். படத்தைப் பற்றி இயக்குநர் சொல்வார்’ என்று இன்னொரு ட்வீட் போட்டு ஜகா வாங்கிவிட்டார் மகள்.
 

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலைப் பாடும் ஏழைப்பெண் பேபி...

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்

விஷால் தான் 'தமிழ் ராக்கர்ஸ்' உரிமையாளரா? சுரேஷ் காமாட்சி அதிர்ச்சி குற்றச்சாட்டு

விருந்துக்கு சென்று விருந்தாகிய இளம்பெண்: அயோக்கியனின் வெறிச்செயல்

ஆசிரியையின் அந்தரங்கத்தை படமெடுத்து மிரட்டிய மாணவன்: திருச்சியில் பெரும் பரபரப்பு

தொடர்புடைய செய்திகள்

விஷால் தான் 'தமிழ் ராக்கர்ஸ்' உரிமையாளரா? சுரேஷ் காமாட்சி அதிர்ச்சி குற்றச்சாட்டு

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலைப் பாடும் ஏழைப்பெண் பேபி...

இவரா விஜய்யின் ஜோடி? தளபதி 63 அப்டேட்!

மனைவி, பிள்ளைகளுடன் தல அஜித் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

அடுத்த கட்டுரையில்