உலக சினிமா- டோண்ட் ப்ரீத் (Don't breathe)

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (19:35 IST)
பெடரிக் அஸ்வரேஸ் இயக்கத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியாகி ஹாலிவுட் மட்டுமல்லாமல் கோலிவுட்டிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் டோண்ட் ப்ரீத் (Don't breathe).
 
ராக்கி, அலெக்ஸ், மணி ஆகிய மூவரும் இளங்குற்றவாளிகள். இவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்காக வீடு புகுந்து திருடும் கொள்ளையர்கள். இதில் ராக்கி கொள்ளை அடிக்கும் பணத்தை வைத்து தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்புகிறாள். அப்போது அந்த மூவருக்கும் ஒரு ரகசியம் தெரியவருகிறது. அது என்னவென்றால் மருத்துவ ரீதியாக ஓய்வு பெற்ற ரானுவ அதிகாரி ஒருவர் அவரது வீட்டில் அதிகளவில் பணம் வைத்துள்ளதாகவும். அவருக்கு கண் பார்வை கிடையாது என்பதும் அவர்களுக்கு தெரியவருகிறது.
 
இதனால் அவரது வீட்டிற்கு கொள்ளையடிக்க செல்கின்றனர். வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டுள்ள நாயிற்கு போதை மருந்து கொடுத்து மயக்கமாக்கி விடுகின்றனர். பின்னர் அந்த வீட்டின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டுள்ளது அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் அந்த வீட்டின் சிறிய கண்ணாடி ஜன்னல் வழியாக நுழைகின்றனர். கண் பார்வையற்ற அந்த நபர் பேட்ரூமில் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு அவரது ரூமில் தூக்க எரிவாயுவை கசியவிடுகின்றனர். 
 
இதன்பின்னர் பணம் கீழ்த்தளத்தில் உள்ள அறையில் இருப்பதாக கருதி அந்த அறையின் கதவை தூப்பாக்கியால் சூடுகின்றனர். சத்தம் கேட்ட அந்த வயதான ராணுவ அதிகாரி கீழ்த்தளத்துக்கு செல்கிறார். அப்போது மணி அந்த நபரிடம் சிக்கி விடுகிறான். தான் பணத்தை கொள்ளையடிக்க தனியாக வந்ததாக தெரிவிக்கிறான். இதையடுத்து, மணியை அந்த நபர் சூட்டுக் கொல்கிறான். பின்னர் பணம் இருக்கும் அறைக்கு சென்று பணத்தை சரி பார்த்துவிட்டு கீழே வரும்போது அங்கிருக்கும் காலணிகளை அவர்கள் தட்டுப்படுகிறது. இதைவைத்து மணி மட்டும் தனியாக வரவில்லை அவருடன் சேர்ந்து யாரோ வந்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது. இதற்கிடையே, ராக்கி மற்றும் அலெக்ஸ் பணத்தை கொள்ளையடித்து அந்த நபரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்.
 
அப்போது அந்த வீட்டில் ஒரு பெண் அடைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர். இதன் பின்னர் அந்த பெண் யார்?, அந்த நபரிடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் டோண்ட் ப்ரீத் படத்தின் மீதி கதை.
 
ரோக் பேனோஸ்ஸின் பின்னனி இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். திகில் நிறைந்த காட்சிகளுக்கு தனது மிரட்டலான இசையால் மிரட்டியுள்ளார் ரோக் பேனோஸ்ஸின். படத்தில் கண் பார்வையற்ற அதிகாரியாக வரும் ஸ்டீபன் லாங் நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார். அனைத்து துறையினரிடம் இருந்தும் சிறப்பாக வேலை வாங்கி அருமையான படைப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் பெடரிக் அஸ்வரேஸ். ஹாரர், திரில்லர் ஜானரில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் இப்படம் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட அனுபவம் தரும்.

அனுஷ்காவுக்கு மெழுகுச்சிலை வைத்த சிங்கப்பூர்

கமலை எதிர்க்க துணிந்த சிம்பு? இந்தியன் 2 அப்டேட்!

விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' டிரெய்லர் நாளை வெளியீடு

என்ஜீனியரிங் மாணவியுடன் உல்லாசம்: பட்டதாரி வாலிபர் கைது

டெல்டா விசிட்: பாதியிலேயே திரும்பும் முதலமைச்சர்; என்ன காரணம்?

தொடர்புடைய செய்திகள்

கஜா புயல்: ரசிகர்களின் கணக்கில் பணம் அனுப்பி உதவும் விஜய்!

'காற்றின் மொழி' பார்ப்பதன் மூலம் கஜா புயலால் பாதித்தவர்களுக்கு உதவலாம்!

கஜா புயல்! உதவி தேவைப்படுவோர் எங்களை அழையுங்கள்... ஹரிஸ் கல்யாண் அழைப்பு

விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' டிரெய்லர் நாளை வெளியீடு

'2.o' ஜுரம்! இந்த வாரமே தமிழில் ஏழு படங்கள் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்