அனைத்தும் இலவசமா? ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை!

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (15:20 IST)
ஜியோ ஜிகாஃபைபர் அறிவிப்பை சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டது. இதன் முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில், இதன் சேவை இன்னும் முழு வீச்சில் துவங்கப்பட்டவில்லை. 
 
இந்நிலையில், இதன் சேவையை குறித்த தகவல்கள் வெளியாகும் முன் பிரீவியூ சலுகை வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜியோ தனது எந்த சேவைகளை துவங்கும் முன் சோதனைக்காக பிரீவியூ சலுகையில் அனைத்தையும் இலவசமாக வழங்குவது வழக்கமானதாகும். 
 
அந்த வகையில், ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகைளும் இலவசமாக வழங்கப்படலாம் என தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகையின் கீழ் பயனர்களுக்கு முதல் 3 மாதங்களுக்கு 100 ஜிபி இலவச டேட்டா 100 Mbps வேகத்தில் வழங்கப்படும் என தெரிகிறது. 
 
ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 முன்பணம் செலுத்தி, முதல் 3 மாதங்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி சலுகைகளை பெற முடியும் என தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

சொத்து வெறி: பெற்ற தந்தையை வீட்டிலிருந்து தூக்கியெறிந்த கொடூர மகள்

இந்த மாத இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை தொட வாய்ப்பு...

பொறியியல் பட்டதாரிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை

தை மாத ராசிப் பலன்கள் 2019 - அனைத்து ராசிகளுக்கும்....

ஹீரோவாக களமிறங்கும் நடிகர் சூர்யாவின் மகன்..!

தொடர்புடைய செய்திகள்

இனிமேல் 100 சேனல்களுக்கு ரூபாய் 153 மட்டுமே! டிராய் அறிவிப்பு

கர்நாடகாவில் ஆட்சி கவிழ்கிறதா? 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 15 பேர் காயம் …ஒருவர் படுகாயம் ...

பொறியியல் பட்டதாரிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை

சபரிமலைக்கு சென்ற மருமகளை தாக்கிய மாமியார்

அடுத்த கட்டுரையில்