Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாகனத்தின் முன் ஆடை கழற்றி.... திணறிய போலீஸார்!

வாகனத்தின் முன் ஆடை கழற்றி.... திணறிய போலீஸார்!
, செவ்வாய், 13 நவம்பர் 2018 (13:08 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று பாரிஸ் நகரில் நடந்த முதல் உலகப்போர் நினைவு தினத்தில் பங்கேற்றார். அங்கு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு பெண்கள் நிர்வாண போராட்டத்தில் குதித்ததால் பாதுகாப்பில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. 
 
டிரம்ப் செயல்படுத்தி வரும் பல்வேறு கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. வெளிநாட்டு தொழிலாளர்கள், அகதிகளுக்கு கெடுபிடி, மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளிவர்வகளுக்கு கட்டுபாடு என அவரது நடவடிக்கைகள் அவருக்கு எதிர்ப்பை சம்பாதித்து தருகின்றன. 
 
இந்நிலையில் டிரம்ப் பாரிஸ் நகருக்கு வந்த போது, திடீரென இளம் பெண் ஒருவர் தனது மேலாடையை கழற்றி வீசியபடி டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார். அவரை தொடர்ந்து மேலும் ஒரு பெண் மேலாடையை கழற்றி எறிந்து போராட்டம் நடத்தினார். 
 
பின்னர் பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். இருப்பினும் அந்த சில நிமிடத்தில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா இருந்தா நீங்க இப்படி பேசிட்டு இருப்பீங்களா? ஜெயக்குமாருக்கு ரஜினிகாந்த் பதிலடி