இந்த முந்திரியை நாய்கூட சாப்பிடாது; கோபமடைந்த இலங்கை அதிபர்

புதன், 12 செப்டம்பர் 2018 (19:09 IST)
இந்த முந்திரியை நாய்கூட சாப்பிடாது; கோபமடைந்த இலங்கை அதிபர்இலங்கை அதிபர் சிறிசேனா ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட முந்திரியை நாய்கூட சாப்பிடாது என்று கூறியுள்ளார்.

 
இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த திங்கட்கிழமை விவசாயிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
கடந்த வாரம் நேபாளத்தில் இருந்து இலங்கை திரும்பியபோது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தேன். அப்போது முந்திரி வழங்கப்பட்டது. மிகவும் தரம் குறைவான முந்திரி. அதை நாய்கூட சாப்பிடாது என்று கூறியுள்ளார்.
 
இதையடுத்து ஸ்ரீலங்கன் விமானத்தில் நட்ஸ்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் துபாயை சேர்ந்த முந்திரி வழங்குநரை மாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING