மோசமான வானிலை - விமான விபத்தில் 2 பைலட்டுகள் பலி

புதன், 16 மே 2018 (15:54 IST)
மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பைலட்டுகள் உயிரிழந்தனர். 
நேபாளத்தின் சிமிகோட் பாஸ் மலைப்பகுதியில்  மகலு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம்  சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. விமானத்தில் கிரன் பட்டாராய் மற்றும் அதித்யா நேபாளி ஆகிய இரு பைலட்டுகள் இருந்தனர்.
 
விமானம் புறப்பட்டு சில மணித்துழிகளில் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து, விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு பைலட்டுகளும் உயிரிழந்தனர்.
 
வானிலை மோசமாக  இருந்த காரணத்தினால் விபத்து நிகழ்ந்துள்ளது என நேபாள விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING