புதிய பி.எம்.டபிள்யூ காரை தந்தைக்கு சவப்பெட்டியாக்கிய மகன்

செவ்வாய், 12 ஜூன் 2018 (19:49 IST)
தந்தைக்கு விலையுயர்ந்த சவப்பெட்டியை செய்த பல மகன்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கின்றோம். சந்தன மரத்தினால் ஆன சவப்பெட்டி முதல் தங்கத்தினால் ஆன சவப்பெட்டி வரை இதுவரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் முதன்முறையாக தந்தைக்காக விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கிய மகன் குறித்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
நைஜீரிய நாட்டில் உள்ள அனம்ப்ரா என்ற  மாகாணத்தில் மொப்சி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த மிகப்பெரும் செல்வந்தர்களுள் ஒருவர் அஜுபுகே என்பவர். இவருடைய தந்தை சமீபத்தில் காலமானார்.
 
இதுவரை யாரும் செய்யாத வித்தியாசமான முறையில் தனது தந்தையை அடக்கம் செய்ய முடிவு செய்த அஜுபுகே, தந்தைக்காக ஒரு புதிய பி.எம்.டபிள்யூ காரை வாங்கினார். பின்னர் அதையே தந்தையின் சவப்பெட்டியாக மாற்றி அதில் அவரது உடலை வைத்து மண்ணில் புதைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தந்தைக்காக இவர் வாங்கிய பி.எம்.டபிள்யூ  காரின் விலை ரூ.45 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING