Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டெர்லைட் நிறுவனத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து விலக்க முடிவா?

ஸ்டெர்லைட் நிறுவனத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து விலக்க முடிவா?
, சனி, 26 மே 2018 (11:52 IST)
தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர். சமீபத்தில் நடந்த இந்த போராட்டத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்த நிலையில் லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டின் முன் லண்டன் வாழ் தமிழர்கள் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி அனில் அகர்வால் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய தூதரகத்தில் தமிழர்கள் மனுவும் அளித்தனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், வேதாந்தா குழுமத்திற்கு எதிராகவும் இங்கிலாந்து நாட்டு எம்.பிக்களை சந்தித்து ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
webdunia
லண்டன் வாழ் தமிழர்களின் இந்த முயற்சிக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.  இங்கிலாந்து நாட்டின் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி முதன்முறையாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது. இந்தியாவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கும், மனித உரிமை மீறலுக்கு காரணமான வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வேதாந்த நிறுவனங்களை விலக்க வேண்டும் என்றும், இங்கிலாந்து நாட்டின் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் செயல் தலைவரும், அக்கட்சி எம்.பி.யுமான ஜான் மெக்டொனால்டு இங்கிலாந்து அரசை வலியுறுத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாம்பு கடித்தது தெரியாமல் பால் கொடுத்த தாயும், குழந்தையும் பலி