Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறந்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்: நியூசிலாந்தில் பரபரப்பு

இறந்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்: நியூசிலாந்தில் பரபரப்பு
, சனி, 1 டிசம்பர் 2018 (17:03 IST)
நியூசிலாந்தில் சாத்தம் தீவில் கரை ஒதுங்கிய 51 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200-க்கு அதிகமான திமிங்கலங்கள் இறந்துள்ளன.
 
நியூசிலாந்தின் தெற்கு தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் உள்ளது சாத்தம் தீவுகள். தொலைதூர பகுதியான இத்தீவில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாகவே உள்ளது.
 
நியூசிலாந்தின் இயற்கை மற்றும் வரலாற்றுச் சொத்துக்களை பாதுகாக்கும் அமைச்சகம் வியாழக்கிழமையன்று ஹான்சன் வளைகுடாவில் 80 - 90 திமிங்கலம் கரை ஒதுங்கியதாக கூறுகிறது.
 
அதில் பல திமிங்கலம் மீண்டும் கடலுக்குள் சென்றுவிட்டது ஆனால் 50 பைலட் திமிங்கலம் இறந்து போனது. ஒரு திமிங்கலத்துக்கு உயிரை காக்கும் முயற்சிகள் வேறுவழியின்றி மேற்கொள்ளப்படவில்லை. இறந்த திமிங்கலங்கள் பின்னர் கடற்கரை மண்ணில் புதைக்கப்பட்டன.
 
நியூசிலாந்தின் தெற்கு ஸ்டீவர்ட் தீவில் 145 பைலட் திமிங்கலங்கள் இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் சாத்தம் தீவுகளில் திமிங்கலங்கள் இறந்துள்ளன. நியூசிலாந்தில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது அரிதான விஷயமல்ல. ஆனால் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கும் நிகழ்வுகள் நடப்பது அரிதானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வருக்கு போட்டியாக டெல்டாவில் கமல் செய்த வேலை...?