Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிரம்ப்பை நனைந்த நூடூல்ஸ் என கேலி செய்த அர்னால்டு!

டிரம்ப்பை நனைந்த நூடூல்ஸ் என கேலி செய்த அர்னால்டு!
, புதன், 18 ஜூலை 2018 (15:22 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் கடந்த 16 ஆம் தேதி சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.
 
அதன்பின்னர் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.
 
அப்போது டிரம்ப், அமெரிக்கா, ரஷ்யா உறவில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இனி வரும் காலங்களிலும் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவோம் என்றார்.
 
இந்நிலையில், நடிகரும், முன்னாள் கலிஃபோர்னியா மாகாண ஆளுநரான அர்னால்டு தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப்பை விமர்சித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
 
அதில், அதிபர் டிரம்ப், நான் இப்போது ரஷ்ய அதிபர் உடனான உங்களது பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்தேன். அந்த வீடியோ மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. நீங்கள் புதின் முன் நனைந்த   நூடுல்ஸ் போல நிற்கிறீர்கள். நீங்கள் என்ன புதினிடம் செல்பியோ அல்லது அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க போகிறீர்களா என கேட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் முறையாக செல்போனில் இண்டர்நெட்; மகிழ்ச்சியில் கியூபா