Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடரும் அவலங்கள் - பத்திரிக்கையாளரை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள்

தொடரும் அவலங்கள் - பத்திரிக்கையாளரை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள்
, ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (11:00 IST)
பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
பெங்களூருவில் பத்திரிகை ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் கடந்த வருடம்  செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  "ரைசிங் காஷ்மீர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவில் ‘கேப்பிட்டல் கெசட்’   செய்தி நிறுவனத்தில் 5 செய்தியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சமீபத்தில் மெக்ஸிகோவில் ரூபன் பாட் என்ற பத்திரிக்கையாளர் சுட்டு கொல்லப்பட்டார்.
 
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக மெக்ஸிகோவில் யாஜலான் நகரில் மரியோ கோமஸ் என்ற பத்திரிகையாளர் நேற்று தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோது அங்கு வந்த சில மர்ம நபர்கள், மரியோவை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிரட்டப்பட்டாரா இளம்பெண்? எஸ்.என்.எஸ் கல்லூரி ஓனர் மீதான செக்ஸ் புகார் வாபஸ்!!!