Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓட்டுப் போட்டு சரியான நபரை தேர்வு செய்யாவிட்டால்... பிக் பாஸில் அரசியல் பேசிய கமல்

ஓட்டுப் போட்டு சரியான நபரை தேர்வு செய்யாவிட்டால்... பிக் பாஸில் அரசியல் பேசிய கமல்
, ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (11:11 IST)

பிக்பாஸின் நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் ஏகபோகமாக அரசியல் வசனங்களை பேசினார்.


பிக்பாஸ் ஒன்று நிகழ்ச்சியில் ஓவியா, ஆரவ், ஆர்த்தி, கஞ்சா கருப்பு என போட்டியாளர்கள் பலரும் மிக இயல்பாக இருந்தனர். அதனால் அந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது  ஆனால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மக்கள் தங்களை பற்றி தவறாக நினைப்பார்களோ என பயந்து நடிக்க ஆரம்பித்தனர்.

இதனால் போட்டியின் சுவாரஸ்யம் குறைந்தது. மக்களின் பார்வையும் குறைந்தது. ஓட்டு படுபவர்களின் எண்ணிக்கை அதைவிட பன்மடங்கு குறைந்துவிட்டது.

இதனால் நேற்றைய நிகழ்ச்சியில் டென்ஷனான கமல்ஹாசன் மக்களின் ஒட்டு போடும் ஆர்வம் குறைந்துவிட்டது வேதனையோடு வெளிப்படுத்தினார். அத்துடன் ஐஸ்வர்யாவை வெளியேற்ற வேண்டும் என்று அவர் சிவப்பு கலர் அட்டையை பொதுமக்கள் முன்னிலையில் காண்பித்தார். ஆனால் மக்கள் ஓட்டு போட்டு அவரை முன்னிலைப்படுத்தினர். இதனால் இந்த வாரம் அவர் வெளியேறவில்லை. அதற்கு பதிலாக வெளியேறப் போவது யார் என்பதை கமல் குறிப்பிடவில்லை.

இந்த ஓட்டுப் போடும் சம்பவங்களை குறிப்பிட்டு பேசிய கமல் மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் அனுப்ப வேண்டும் என்பதை முடிவு எடுக்காததால் தவறான நபர்கள் சேர்ந்து எடுக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தார். ஓட்டு போடுவது புறக்கணிப்பதும் ஆபத்தில் முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.

கமலின் இந்தப் பேச்சு நிகழ்கால அரசியலை தொடர்புபடுத்தி இருந்ததை காணமுடிந்தது. கமலின் பார்வையில் மக்கள் சரியான நபரை அரசியலில் தேர்ந்தெடுக்க வில்லை என்பதை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுக்கடுக்கான பொய்கள்: ஐஸ்வர்யாவை போட்டு வாங்கிய கமல்ஹாசன்