Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வித்தியாசமான முறையில் கமலுக்கு வாழ்த்து கூறிய விக்ரம்

வித்தியாசமான முறையில் கமலுக்கு வாழ்த்து கூறிய விக்ரம்
, புதன், 7 நவம்பர் 2018 (12:05 IST)
பிறந்தநாள் கொண்டாடி வரும் கமலுக்கு நடிகர் விக்ரமின் கடாரம் கொண்டான் படக்குழுவினருடன் இணைந்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 
இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
‘கடாரம் கொண்டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளி முன்னிட்டு கமல் தனது டிவிட்டரில் வெளியிட்டிருந்தார் .
 
இந்நிலையில், தற்போது  கமலுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக கடாரம் கொண்டான் படக்குழுவினருடன் சேர்ந்து கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்ரம் . இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'சர்கார்' கோமளவல்லி!