காதலர் தினத்துக்கு விஜய் சேதுபதி தரும் பரிசு இதுதான்...

செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (14:17 IST)
காதலர் தினத்தை முன்னிட்டு, விஜய் சேதுபதி படத்தில் இருந்து ஒரு பாடலை ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘ஜுங்கா’. ‘வனமகன்’ படத்தில் நடித்த சயிஷா, விஜய் சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை, விஜய் சேதுபதியே தயாரித்துள்ளார்.
 
நாளை காதலர் தினத்தை முன்னிட்டு, இந்தப் படத்தில் இருந்து ஒரு பாடலை ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். ‘கூட்டிப்போ கூடவே’ என்ற இந்தப் பாடலை, சத்யபிரகாஷ் மற்றும் ரனினா ரெட்டி இருவரும் பாடியுள்ளனர். லலிதானந்த் வரிகளுக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING