Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7வது முறையாக விஜய் சேதிபதியுடன் ஜோடி போட்ட காயத்ரி!

7வது முறையாக விஜய் சேதிபதியுடன் ஜோடி போட்ட காயத்ரி!
, சனி, 15 டிசம்பர் 2018 (16:12 IST)
விஜய் சேதுபதி அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். 96 படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சீதக்காதி படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 
 
சீதக்காதி படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இதில் ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதனை அடுத்து பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். 
 
இதனை தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து இளையராஜா இசையமைக்கிறார்.
 
மேலும், படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். விஜய் சேதுபதி - காயத்ரி இணைவது இது 7வது முறையாகும். ஏற்கனவே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ரம்மி, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகளை பெருமைப்படுத்தும் கேரக்டரில் சத்யராஜ்!