Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் 63 யும் திருட்டு கதையும் - அட்லீக்கு எதுக்கு இந்த பொழப்பு..?

விஜய் 63 யும் திருட்டு கதையும் - அட்லீக்கு எதுக்கு இந்த பொழப்பு..?
, வெள்ளி, 16 நவம்பர் 2018 (16:10 IST)
ரசிகர்களின் இதயத்து அதிபதியாய் விளங்கும் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 63 படத்தின் பணிகள் இனிதே பூஜையுடன் சமீபத்தில் துவங்கியது. இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
சமீபத்தில் விஜய் 63 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அடுத்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
 
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய் சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். 
webdunia
 
சர்கார் படம் வெளியாவதற்கு முன்னதாகவே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி தவித்தது . இதற்காக நீதிமன்றம் சென்ற சர்கார் படக்குழு செங்கோல் கதையாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்து கொண்டது. இதனால் திட்டமிட்டபடி சர்கார் தீபாவளிக்கு வெளியானது. மேலும் படம் வெளியான 6 நாட்களில் ரூ.200 கோடி வரை வசூலித்து என்று அப்பட்டமான பொய் கூறியது  படக்குழு. பிறகு படத்தின் தயாரிப்பாளர் 200 கோடி இல்லை வெறும் 150 கோடிதான் என கூவி கூவி 200 கோடி வசூலை ஈட்டினர். 
 
சர்காரை அடுத்து விஜய்  எந்த இயக்குநருடன் கை கோர்ப்பார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி நின்றது.
webdunia
 
அதற்கு விடைசொல்லும் விதமாக இயக்குநர் அட்லீக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். இவர்கள் இருவரும் 3-வது முறையாக இணைந்து பணியாற்ற இருக்கும் புது படத்துக்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டுள்ளது. இதை ஏஜிஎஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 
 
அட்லீ இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மெர்சல் பட ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
webdunia
 
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான மெர்சல் பட பாடல்களில் "ஆளப்போறான் தமிழன் " பாடலை தவிர வேற எந்த ஒரு பாடலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அமையவும் இல்லை, இன்று நம் நினைவிலும் இல்லை. இது இப்படி இருக்க மறுபடியும் 63 யில் எந்த நபிக்கையோடு இணைந்திருக்கிறார்களோ...? "விஜய்" என்ற அடையாளம் ஆஸ்கார் நாயகன் என்ற பிராண்ட் இது இரண்டும் இல்லை என்றால் 63 சல்லி பைசாவிற்கு தேறாது. 
 
அட்லீ இயக்கத்தில் ஒரு படம் உருவாகிறது என்றாலே கொஞ்சம் சூதானமாகத்தான் சிந்திக்கவேண்டும். ஏனென்றால் அட்லீ இயக்கிய அனைத்து படங்களுமே பழைய படங்களில் இருந்து திருடப்பட்டவை தான். 
webdunia
 
அந்த வரிசையில் 1986 -ல்  ரேவதி - மோகன் நடிப்பில் வெளிவந்த மௌன ராகம் படத்தின் பிரதிபலிப்பு தான்  "ராஜா ராணி" , பழைய படத்தை வைத்து அப்படியே நியூ வெர்சன் கொடுத்துவிட்டு அதை தான் சொந்தமாக கதை எழுதப்பட்டதாக பொய் கூறினார் இயக்குனர் அட்லீ.
 
அவருக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக, நெட்டிசன்கள் ஒன்று கூடி மௌன ராகம் படத்தின் காட்சிகளையும் " ராஜா ராணி"  படத்தின் காட்சிகளை ஒப்பிட்டு மறைக்கப்பட்ட உண்மையை உடைத்தெறிந்தனர். இதனால் மிகுந்த சங்கடத்திற்கு ஆளான திருட்டு கதை கிரேட்டிவ் இயக்குனர் அட்லீ  இனிமேலும் சமாளிப்பது நம் தொழிலுக்கு நல்லதல்ல என்று சுதாரித்துக்கொண்டு, ராஜா ராணி படத்தின் கதை மௌன ராகத்தில் இருந்து சுடப்பட்டது தான், ஆனால் நான் அதை புதுமையாக சித்தரித்து தான் ராஜா ராணியை உருவாக்கினேன் என்று மழுப்பலான பதிலை கூறி தப்பித்தார் அட்லீ. 
webdunia
 
இதுதான் இப்படி என்றால் அட்லீயின் அடுத்த படமான " தெறி " படத்தை இயக்குவதிலும் தனது சொந்த புத்தியை யூஸ் பண்ணவே இல்லை மாறாக 1990 - ல் இயக்குனர் சுபாஷ் இயக்கத்தில் வெளிவந்த சத்ரியன் படத்தை அப்படியே ஒரு காட்சி பாக்கி வைக்காமல் திருடி எடுக்கப்பட்டது தான் "  தெறி " , மீண்டும் அட்லீ  முழு பூசணிக்காயை சோற்றில் வைத்து மறக்க முயன்று நெட்டிசன்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். இதனால் நொந்து போன அட்லீக்கு விஜய் ஆறுதல் கூறியதெல்லாம் அப்போதய ரெண்டிங்கில் வலம் வந்தது.
webdunia
 
சொந்தமாக ஒரு கதையையும் எழுத முடியாத நீயெல்லாம் ஏன் படத்தை இயக்குகிறாய் என பலர் வறுத்தெடுத்தலும் அதைப்பற்றியெல்லாம் கவலையேபடாத இயக்குனர் அட்லீ "மெர்சல்" இயக்க ஆரம்பித்தார். பின்னாளில் அந்த கதை கசிய நெட்டிசன்கள் இது எந்த படத்தில் இருந்து சுடப்பட்டுள்ளது என்பதை தீர ஆராய்ந்து பார்த்தவர்களின் கண்ணில் அணுகுண்டு தூக்கி போட்டார் அட்லீ மெர்சல் படம் கமல் நடிப்பில் வெளிவந்த " அபூர்வ சகோதர்கள் " படத்தின் காப்பி என்று அப்பட்டமாக தெரியவந்தது. 
 
இப்படி தன் சொந்த புத்தியை ஒரு சிங்கிள் படத்திற்கு கூட யூஸ் பண்ணாத இயக்குனர் அட்லீக்கு நடிகர் விஜய் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
 
இந்நிலையில் தற்போது மீண்டும் தளபதி 63 படத்தில் இணைந்த இந்த கூட்டணி ரசிகர்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது.  அடுத்து என்ன திருட்டு கதையை எடுக்கபோறார்களோ என்ற சந்தேகத்தில் உள்ளனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று மாலை அனிருத் வெளியிடும் அஞ்சலியின் லிசா டீசர்