Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'வேலைக்காரன்' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

'வேலைக்காரன்' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?
, வெள்ளி, 15 டிசம்பர் 2017 (23:59 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்ற இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'வேலைக்காரன்' திரைப்படம் 159 நிமிடங்கள், அதாவது இரண்டு மணி 39 நிமிடங்கள் ஓடும் வகையில் சற்று நீளமான படமாகவே அமைந்துள்ளது. இருப்பினும் கதையின் அழுத்தம், சுவாரஸ்யமான காட்சிகள் இருப்பின் படத்தின் நீளம் ஒரு ப்ளஸ் ஆகவே பார்க்கப்படும்

இந்த நிலையில் வரும் ஞாயிறு முதல் இந்த படத்தின் முன்பதிவுகள் தொடங்கவுள்ளதாக முன்னணி திரையரங்குகள் அறிவித்துள்ளன. அஜித், விஜய் படங்களை அடுத்து 'வேலைக்காரன்' திரைப்படமும் அதிகாலை காட்சி திரையிட ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், காவல்துறை அனுமதி கொடுத்தால் முக்கிய திரையரங்குகளில் அதிகாலை காட்சி திரையிடப்படும் என்றும் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலர் தின ஸ்பெஷலாக வெளிவருகிறது சாய்பல்லவியின் முதல் தமிழ்ப்படம்