Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 63' படத்தின் சர்ப்ரைஸ் செய்தி இதுதான்:

தளபதி 63' படத்தின் சர்ப்ரைஸ் செய்தி இதுதான்:
, புதன், 14 நவம்பர் 2018 (19:07 IST)
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'தளபதி 63; திரைப்படம் உருவாகவிருப்பதாக இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது

இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா அவர்கள் இன்று இரவு 7 மணிக்கு 'தளபதி 63' படம் குறித்த ஒரு சர்ப்ரைஸ் தகவல் வெளியிட உள்ளதாக அறிவித்தார். இதனால் 7 மணி எப்போது வரும் என விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆம் 'தளபதி 63' படத்தின் சர்ப்ரைஸ் செய்தி இதுதான். இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது என்பதுதான். எனவே 'மெர்சல்', 'சர்கார்' படங்களை அடுத்து மீண்டும் ஒரு தீபாவளி விருந்து விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது.

webdunia
ஏற்கனவே இந்த படம் 2019ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்டாலும் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி மிக்ஸி, கிரைண்டர்னா... தல வேட்டி சேல...: ஆனா டார்கெட் ஒன்னுதான்!