Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'செம போத ஆகாதே' பாடல்கள்-டிரைலர் ரிலீஸ் எப்போது?

'செம போத ஆகாதே' பாடல்கள்-டிரைலர் ரிலீஸ் எப்போது?
, திங்கள், 20 நவம்பர் 2017 (23:39 IST)
நடிகர் முரளி 'கிக் ஆஸ் எண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'செம போத ஆகாதே' என்ற படத்தை தயாரித்து நடித்து வந்தார். அவருடைய முதல் படமான  'பாணா காத்தாடி' படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார்





இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகும் தேதியை அதர்வா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வரும் நவம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என்றும் அன்றே இந்த படத்தின் டிரைலரும் வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா, மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பத்மாவதி திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் தடையா?