Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள வெள்ள நிவாரண நிதி கொடுத்த ரஜினிகாந்த், ஷங்கர்

கேரள வெள்ள நிவாரண நிதி கொடுத்த ரஜினிகாந்த், ஷங்கர்
, சனி, 18 ஆகஸ்ட் 2018 (17:46 IST)
கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையால் அம்மாநில மக்கள் அத்தியாவசிய தேவையை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக குடிதண்ணீர், உணவு, பால் ஆகியவை கூட பெரும்பாலான மக்களுக்கு கிடைக்கவில்லை.
 
இந்த நிலையில் கேரளாவுக்கு பல்வேறு இடங்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் நிதியுதவியால் ஓரளவு மீட்புப்பணியும் மக்களுக்கு தேவையான பொருட்களும் கிடைத்து வருகிறது.
 
இந்த நிலையில் தமிழ்த்திரையுலகினர் கேரள மாநில வெள்ள நிவாரண நிதியை கடந்த இரண்டு நாட்களாக லட்சக்கணக்கில் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.15 லட்சமும், இயக்குனர் ஷங்கர் ரூ.10 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன நடக்குமென தெரியவில்லை : நடிகை அனன்யா (வீடியோ)