Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தை சந்தித்த தேசிய விருது பெற்ற இயக்குனர்

அஜித்தை சந்தித்த தேசிய விருது பெற்ற இயக்குனர்
, சனி, 16 பிப்ரவரி 2019 (08:29 IST)
தல அஜித் நடிக்கும் அடுத்த படமான 'தல 59' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள சமீபத்தில் அஜித் ஐதராபாத் சென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் 'தல 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மோகன்லால் நடித்து வரும் மலையாள திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி வருகிறார்.

webdunia
இந்நிலையில் அஜித், பிரியதர்ஷன் சந்திப்பு நேற்று நடந்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் இருவரும் இணைந்த புகைப்படம் இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், 'தல 59' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'எனை நோக்கி பாயும் தோட்டா' தணிக்கை தகவல்