Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

8 படுக்கையறைகளுடன் ரூ.30 கோடியில் சொகுசு பங்களா கட்டிய பிரபல நடிகை

8 படுக்கையறைகளுடன் ரூ.30 கோடியில் சொகுசு பங்களா கட்டிய பிரபல நடிகை
, சனி, 13 ஜனவரி 2018 (07:11 IST)
ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' என்ற தமிழ் படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் நடித்த 'குயீன்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் மழையை பொழிந்ததால் இவருடைய சம்பளம் ஐந்து கோடிகளை தாண்டி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கங்கணா ரணாவத் 30 கோடி ரூபாய் செலவில் புதிய பங்களா ஒன்றை கட்டியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் கங்கணா, தனது சொந்த ஊரான இமாசலபிரதேசத்தில் உள்ள மணாலியில் இந்த சொகுசு பங்களாவை கட்டியுள்ளார்.

இந்த சொகுசு பங்களாவில் 8 படுக்கையறைகளும், இமயமலையை வீட்டில் இருந்தே காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மாடங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பங்களாவின் விதவிதமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் ராக்கர்ஸிடம் கெஞ்சி கதறிய விக்னேஷ் சிவன்