Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இருட்டு அறையில் முரட்டு குத்து: ரிலீஸ் தேதி அறிவிப்பு

இருட்டு அறையில் முரட்டு குத்து: ரிலீஸ் தேதி அறிவிப்பு
, வியாழன், 26 ஏப்ரல் 2018 (22:59 IST)
கடந்த ஆண்டு வெளிவந்த அடல்ட் காமெடி படமான 'ஹரஹர மகாதேவகி படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெய்குமாரின் அடுத்த அடல்ட் படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தத்திற்கு முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
 
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் மே 4ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வெளிவந்த ஒரு செய்தி குறிப்பில் மே 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் படக்குழுவினர் இந்த படம் மே 4ல் ரிலீஸ் ஆகும் என்று உறுதிபட கூறியுள்ளனர்
 
webdunia
ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் கவுதம் கார்த்திக், வைபவி, ஷா ரா, யாஷிகா, கருணாகரன், ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலு ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷாலின் 'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு