வசூலில் ரூ.15 கோடியை தொட்ட இரும்புத்திரை!

வியாழன், 17 மே 2018 (15:43 IST)
சினிமா திரையுலகினரின் வேலைநிறுத்த போரட்டத்திற்கு பிறகு வெளியான சில படங்களில் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரையும் ஒன்று.
 
வெளியாகி ஒரு வாரம் ஆகிய நிலையில் இரும்புத்திரை வசூல் ரூ. 15 கோடியை தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். 
 
இந்த படம் கடந்த வாரம் வெளியானது. வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இதுநாள் வரை தமிழகத்தில் மட்டுமே ரூ 12 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். 
 
மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ.15 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING