Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவில் வசூலைக் குவிக்கும் ‘பாகுபலி 2’

சீனாவில் வசூலைக் குவிக்கும் ‘பாகுபலி 2’
, திங்கள், 14 மே 2018 (10:43 IST)
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 2’, சீனாவில் வசூலைக் குவித்து வருகிறது. 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘பாகுபலி 2’. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், பிரம்மாண்டமான வரலாற்றுப் படமாக அமைந்தது.
webdunia
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெளியான இந்தப் படம், 1000 கோடிகளை வசூலித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.  இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி சீனாவில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஹிந்திப் படங்களைவிட வசூல் குறைவுதான் என்றாலும், இதுவரை 10 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால், படத்துக்கு கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், ஜப்பானைப் போல இங்கும் 100 கோடி வசூலிக்கும் என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலீசுக்கு முன்பே கார்த்தி படத்தை கைப்பற்றிய விஜய் டிவி