இந்தி, தமிழில் நடிக்கயிருக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

செவ்வாய், 17 ஜூன் 2014 (11:18 IST)
ஸ்ரீசாந்தை இனி முன்னாள் கிரிக்கெட் வீரர் என்றழைப்பதுதான் சரியாக இருக்கும். மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்துக்கு பங்கிருப்பதை கண்டு பிடித்து அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு நிரந்தரமாக கிரிக்கெட்டிலிருந்து விலக்கி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
தவறி, ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று தீர்ப்பானாலும் அவர் கிரிக்கெட்டுக்கு திரும்பும் ஐடியா இருப்பதாக தெரியவில்லை.
 
சூதாட்ட சர்ச்சையில் மாட்டிக் கொண்ட உடனேயே இசை, நடனம் என்று திசையை மாற்றிக் கொண்டார் ஸ்ரீசாந்த். தற்போது டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்களிப்பு செலுத்தி வருகிறார். அவரது குறிக்கோள் சினிமாவில் நடிப்பது. இந்த வருடம் இந்தி சினிமாவில் ஸ்ரீசாந்த் நடிப்பார் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
 
இந்தி மட்டுமின்றி தமிழிலும் ஸ்ரீசாந்துக்கு வாய்ப்புகள் வருகின்றனவாம். ஆனால் இந்திக்குதான் அவர் முதலிடம் தருகிறார். இந்திப் படம் முடிந்ததும் இந்த வருடத்தில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் அவர் தமிழ்ப் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்