கன்னட படத்தை தயாரிக்கும் தனுஷ்!

வியாழன், 17 மே 2018 (17:51 IST)
கன்னடத்தில் ரீமேக் ஆகவுள்ள நானும் ரவுடி தான் திரைப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார்.
 
கடந்த 2016ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிப்பில், அனிருத் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் நானும் ரவுடிதான். இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார்.
 
இந்தப் படம் தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகவுள்ளது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ரிஷி நடிக்கிறார். நயன்தாரா கதாபாத்திரத்தில் விக்ரம் வேதா படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இப்படத்தையும் தனுஷே தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING