மேயாத மான் ஹீரோயினை தொடர்ந்து கோலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகை

சின்னத்திரை பிரபலமான தெய்மகள் சத்யா (வாணி போஜன்) பெரியதிரையில் கதாநாயகியாக நடிக்கிறார். சின்னத்திரை பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வருவது  ஒன்றும் புதிது கிடையாது.
இந்நிலையில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் பிரபலம் ப்ரியா பவானிசங்கர், மேயாத மான் என்ற படத்தின் மூலம் கோலிவுட் ஹீரோயினாக  நடித்துள்ளார். இதனால் பெரிய திரையில் நல்ல பெயர் கிடைத்ததோடு பிரபலம் அடைந்தார். இந்நிலையில் மேலும் ஒரு டிவி பிரபலம் ஹீரோயினாகியுள்ளார்.  இவர் தெய்வமகள் தொலைக்காட்சி தொடரில் சத்யாவாக நடித்து பிரபலமானவர் வாணி போஜன். அவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோயின் அவதாரம்  எடுத்துள்ளார்.
தான் ஹீரோயினாகியுள்ளதை வாணி போஜன் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். என் மகன் மகிழ்வன் படத்தை இயக்கிய லோகேஷின் இரண்டாவது படத்தின் ஹீரோயினாகியுள்ளார் வாணி போஜன். அந்த படத்திற்கு என்.ஹெச்.4 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING