Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சார்லி சாப்ளின் 2' டிரைலர் இன்று வெளியீடு

'சார்லி சாப்ளின் 2' டிரைலர் இன்று வெளியீடு
, செவ்வாய், 15 ஜனவரி 2019 (15:46 IST)
வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாரிப்பதை இப்போது புதிய பேஷனாகிவிட்டது . பில்லா , காஞ்சனா, களவாணி, மாப்பிள்ளை, என வரிசையாக சொல்லி கொண்டே போகலாம். 

இந்நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான படம் சார்லி சாப்ளின். அந்த படத்தை அடுத்து சார்லி சாப்ளின் 2 தற்போது உர்வாகி வருகிறது. பிரபுதேவா நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை நிக்கி கல்ராணி, அடா ஷர்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சார்லி சாப்ளின் பட இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்குகிறார்.
 
அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. 
 
இந்த படத்தின் டிரைலரை இன்று மாலை 5 மணி அளவில் டேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிடுகிறார்.  சார்லி சாப்ளின் 2 திரைப்படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன் பிக்சர்ஸ் அடுத்த படம் குறித்து முக்கிய அறிவிப்பு!