Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலா படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா?

பாலா படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா?
, வியாழன், 5 ஜூலை 2018 (19:00 IST)
பாலா இயக்கும் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்த ஆர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் பாலா இயக்கவுள்ளார். இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பெங்காலி நடிகை மேகா நடிக்கிறார்.
 
மேலும், காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
webdunia
 
இந்த நிலையில் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை பிக்பாஸ் ரைசா நடனமாடவுள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து ரைசா பியார் பிரேமா காதல் படத்தின் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிடம் எல்லை மீறிய ஷாருக்கான்? திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!