Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூஜையுடன் தொடங்கியது அதர்வாவின் குருதி ஆட்டம்

பூஜையுடன் தொடங்கியது அதர்வாவின் குருதி ஆட்டம்
, சனி, 4 ஆகஸ்ட் 2018 (14:09 IST)
`8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் த்ரில்லர் கதையில் நடிகர் அதர்வா நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக தகவல் கூறுகின்றன.
`குருதி ஆட்டம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திக் பூஜை சமீபத்தில் நடந்தது. படம் குறித்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் கூறுகையில், "இந்த படம்  முழுக்க முழுக்க மதுரை பின்னணியில் உருவாக இருக்கிறது. திரில்லர் பிண்ணனியில் உருவாகும் இந்த படம் அதர்வாவின் முழு திறமைக்கும் தீனி போடும்  படமாக அமையும். கதாநாயகி தேர்வு நடைப்பெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும்" எனவும் கூறியுள்ளார். மேலும் ராக் போர்ட்  என்டர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
 
அதர்வா நடிப்பில் `இமைக்க நொடிகள்', `பூமராங்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அதர்வா அடுத்ததாக `8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் உடன் இணைந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பியூஸ் மனுஷ் விழாவில் கலந்துகொள்கிறார் என்றதுமே பயந்தேன்; ராதாரவி பேச்சு