Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படப்பிடிப்பில் நடிகை அமலா பால் காயம்!

படப்பிடிப்பில் நடிகை அமலா பால் காயம்!
, செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (13:16 IST)
அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில், 'அதோ அந்த பறவை போல' என்ற படத்தில் அமலா பால் நடித்து வருகிறார்.
ஹீரோயினை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.  இதில் அமலா பாலுக்கு அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் நிறையவே உள்ளன. தற்போது  சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நடிகை அமலா பால் ஒரு சண்டைக் காட்சிக்காக, கையை வேகமாகச் சுழற்றிய போது, தசைநார்களில்  காயமாகி உள்ளது. ஆரம்பத்தில் அதை சுளுக்கு என  படக்குழு  நினைத்துள்ளது, இதனால் அவருக்கு ஐஸ் ஒத்தடம்கொடுத்து படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தி  உள்ளது.
 
ஆனால் அமலா பாலுக்கு வலி அதிகமானவுடனே, அந்தக் காட்சியை மட்டும் பிறகு எடுத்துக்கொள்ளலாம் எனத் தள்ளிவைத்துவிட்டு, அவர் கையை அதிகம்  பயன்படுத்தாமல் இருக்கும் மற்ற காட்சிகளை எடுத்தனர். 
 
பிறகு, சிகிச்சைக்காக கொச்சி சென்றுள்ள அவர், விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம்  நிறைவடைந்துவிட்டது. அமலா பால் இயல்பு நிலைக்கு வந்தவுடன் மீதமுள்ள காட்சிகளை எடுக்க  திட்டமிட்டுள்ளார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபுதேவாவுடன் சாயிஷா காதல்?