Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காப்பான் ஷூட்டிங்கில் அஜித் ஸ்டைலை காப்பியடித்த சூர்யா.! என்ன பண்ணாருன்னு பாருங்க!

காப்பான் ஷூட்டிங்கில் அஜித் ஸ்டைலை காப்பியடித்த சூர்யா.! என்ன பண்ணாருன்னு பாருங்க!
, வியாழன், 21 பிப்ரவரி 2019 (18:48 IST)
அல்டிமேட் ஸ்டார் அஜித் காலம் காலமாக பின்பற்றிவரும் ஒன்றை சூர்யா காப்பான் படப்பிடிப்பில் அப்பட்டமாக காப்பியடித்துள்ளார்.


 
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிகர் சூர்யா `காப்பான்' படத்தில் நடித்துவருகிறார் . இப்படத்தின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முடிந்தததாக படக்குழு அறிவித்தது.
 
இப்படத்தில் பிரதமரை பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.  
 
இந்த நிலையில் தற்போது சொல்லவரும் செய்தி என்னவென்றால், காப்பான் படத்தின் மொத்த படக்குழுவினருக்கும் நடிகர் சூர்யா இன்று பிரியாணி விருந்து அளித்துள்ளார். படக்குழுவுக்கு சூர்யா பிரியாணி பரிமாறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

webdunia

 
பொதுவாக அஜித்திற்கு தான் சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவர் நடித்த பல படங்களின் படப்பிடிப்புகளில் அவரே பிரியாணி சமைத்து சக கலைஞர்களுக்கு தனது கையால் பரிமாறியுள்ளார். தற்போது அஜித்தின் அதே  பாணியில் நடிகர் சூர்யா காப்பான் பட குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம்மயான டிரைலர் வருது! "சூப்பர் டீலக்ஸ் 2 லுக்" போஸ்டருடன் விஜய் சேதுபதி அறிவிப்பு!