Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
, செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (19:30 IST)
இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', 'ஜூங்கா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது அவர் நடித்த அடுத்த படமான '96' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

விஜய்சேதுபதியுடன் முதல்முறையாக த்ரிஷா ஜோடியாக நடித்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

webdunia
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம்குமார் இயக்கியுள்ள '96' திரைப்படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், பகவதிபெருமாள், காளி வெங்கட் , உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

16 வயதினிலே படத்தில் சப்பானி வேடத்தில் நடித்திருக்க வேண்டியவர் இவரா!