ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா மும்பை? பஞ்சாபுடன் மோதல்...

புதன், 16 மே 2018 (12:14 IST)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. 
 
இந்த போட்டி மும்பை அணிக்கு மிக முக்கிஉய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் தொடக்கத்தில் தோல்விகளை சந்தித்த பின்னர் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்தது. 
 
ஆனால் ராஜஸ்தான் அணியிடம் கண்ட தோல்வியின் காரணமாக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை அணி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.
 
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சி இருக்கும் இரண்டு ஆட்டங்களில் மும்பை வெற்றிபெற்றே ஆகவேண்டும். ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற தவறினால் தொடரில் இருந்து வெளியேறுவது உறுதி.
 
அதேபோல், பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. ஆனால், பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பஞ்சாப் அணி இன்னும் இழக்கவில்லை. 
 
இன்றைய ஆட்டத்திலும், அடுத்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் அடுத்த சுற்றில் பஞ்சாப் அணி கால்பதிக்கலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING