பொலார்ட் அதிரடியில் மும்பை அணி 186 ரன்கள் குவிப்பு!

புதன், 16 மே 2018 (22:04 IST)
இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்துள்ளது.
 
தொடக்க வீரரான லிவிஸ், இஷான் கிஷான், கேப்டன் ரோகித் சர்மா சொறப ரன்களில் ஆட்டமிழக்க. கிருணல் பாண்டியா, பொலார்ட் ஆகியோர் அணீயை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
 
பொலார்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். கிருணல் பாண்டியால் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர்கள் ஆட்டமிழந்த பின் அணியின் ரன் வேட்டை வெகுவாக குறைந்தது. ஆனால் கடைசி ஓவரின் மோத் சர்மா சொதப்பினார். இதனால் கடைசி ஓவரில் மட்டும் மும்பை அணிக்கு 11 ரன்கள் கிடைத்தது.
 
இதைத்தொடர்ந்து பஞ்சாப் ரன்கள் எடுத்தால் 187 வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING