Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா நிதான ஆட்டம் – மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிறகு 151 ரன்கள்

இந்தியா நிதான ஆட்டம் –  மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிறகு 151 ரன்கள்
, சனி, 8 டிசம்பர் 2018 (13:53 IST)
ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட்டின் இந்திய அணி தனது மூன்றாம் நாள் முடிவில் ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா அஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியா புஜாராவின் சிறப்பான ஆட்டத்தால் கௌரவமான ஸ்கோரை எட்டியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 250 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்களும் ஸ்டார்க், கம்மின்ஸ், லியான் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அடுத்து நேற்றுக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் இந்தியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மட்டும் நிலைத்து நின்று ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார். மற்ற வீரர்கள் அனைவரும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தங்கள் விக்கெட்களை இழந்து வெளியேறினர். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணி சார்பில் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 72 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் பூம்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்களும், இஷாந்த் ஷர்மா மற்றும் ஷமி 2 விக்கெட்களும்  வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து இந்தியா 15 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்திய அணி தனது 2 வது இன்னிங்ஸைத் தொடங்கி ஆடிவருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் 18 ரன்களோடும் லோகேஷ் ராகுல் 44 ரன்களோடும் நடையைக் கட்ட அடுத்து வந்த புஜாராவும் கோஹ்லியும் பொறுப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். நிதானமாக விளையாடிய கோஹ்லி நாதன் லியன் பந்தில் ஆட்டமிழந்தார். கோஹ்லி லியன் பந்தில் ஆட்டமிழப்பது இது 6 வது முறையாகும். அதையடுத்து வந்த ரஹானே புஜாராவோடு சேர்ந்து விளையாடி வருகிறார். ஆட்ட்நேர முடிவில் புஜாரா 40 ரன்களோடும், ரஹானே 1 ரன்னோடும் களத்தில் உள்ளனர்.

இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவை விட   166 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா - ஆஸ்திரேலியா: தேநீர் இடைவேளையில் இந்தியா 86/2