Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’தல ’ தோனி கீப்பிங் செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள் - ஐசிசி

’தல ’ தோனி கீப்பிங் செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள்  - ஐசிசி
, திங்கள், 4 பிப்ரவரி 2019 (14:39 IST)
இந்தியா கிரிக்கெட் அணியில் மிக முக்கியமான கேப்டன்களில் ஒருவர் தோனி.  இவர் ஏராளமான ரசிகரகளைக் கொண்டவராவர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டில் தன் பழைய பார்ர்முக்கு வந்துள்ளாத அனைவரும் தெரிவித்தனர். தன் விமர்சனங்களுக்கு தன் பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தார் தோனி.
இந்நிலையில் ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் அமைப்பு தோனி பற்றி கூறியுள்ளதாவது:
 
ஸ்டெம்புக்கு பின்னால் தோனி விக்கெட் கீப்பிங் செயும் போது பேட்ஸ்மேன்கள்  யாரும் காலை கிரீஸிலிருந்து எடுக்காதீர்கள் என ஐசிசி அமைப்பு தன் அதிகார்வபூர்வ டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளது.
 
அதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, பேட்ஸ்மேன் ஜேன்ஸ் நீசனை கண் இமைக்கும் நொடியில் அவுட் செய்தார்.
 
இந்நிலையில் ஐப்பானை சேர்ந்த ஒருவர் தங்களுக்கு ஏதாவது அறிவுரை கொடுங்களென ஐசிசியின் டுவிட்டர் பக்கத்தில் கேட்டார்.
 
அதற்கு ஐசிசி தரப்பில் தோனி ஸ்டெம்பிற்கு பின்னார் விக்கெட் கீப்பிங் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் கிரிஸிலிருந்து காலை எடுக்காதீர்கள் என பதில் அளித்திருந்தது, இது இணையதளத்தில் தோனி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசத்தும் இந்திய பவுலிங் – உலகக்கோப்பை சாத்தியமே…