சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டுகள் தடை

வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (14:54 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட், சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபனமானதால், அவருக்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான, நசீர் ஜாம்ஷெட் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. நசீர் ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து அவர் மீதான சூதாட்டப் புகார் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வந்தது.
 
இந்நிலையில் ஜாம்ஷெட் மீதான சூதாட்ட புகார்கள் உண்மையானவை என தெரிய வந்துள்ளதால், அவர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 10 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் எனது கனவை சிதைத்த அரிசி கஞ்சியும் ஊறுகாயும்: வேதனைப்படும் பி.டி.உஷா