Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேட்ஸ்மென்களை விடுத்து பவுலர்களை தாக்கும் கவாஸ்கர்!

பேட்ஸ்மென்களை விடுத்து பவுலர்களை தாக்கும் கவாஸ்கர்!
, செவ்வாய், 10 டிசம்பர் 2013 (15:42 IST)
FILE
பிசிசிஐ த்லையீட்டில் நடைபெற்று வரும் ஐசிசி அமைப்பு கிரிக்கெட்டை இருதரப்பினருக்கும் நியாயமாக நடத்தாமல் கல்லா கட்டுவதற்காக பந்து வீச்சைக் காலி செய்யும் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்ததால் ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக இந்திய பந்து வீச்சாளர்கள் திணறுகின்றனர்.

இது புரிந்தே சுனில் கவாஸ்கர், தென் ஆப்பிரிக்காவில் இந்தியாவின் பந்து வீச்சு ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்கிறார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியது இதோ:

தென்ஆப்பிரிக்க ஆடு களங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடுவது கடினமானது என்பது எதிர்பார்த்த ஒன்றாகும். ஆனால் பவுலர்களின் செயல்பாடுதான் சரியில்லை. மோசமான தோல்விக்கு பந்து வீச்சாளர்கள் சரியாக வீசாததே காரணம்.

முகமது ஷமியை தவிர மற்ற வேகப்பந்து வீரர்கள் யாருமே சிறப்பாக வீசவில்லை. தென்ஆப்பிரிக்க ஆடுகளங்கள் பவுன்ஸ் ஆக கூடியது. இதில் நமது பவுலர்கள் சாதிக்க தவறியதால் மோசமான தோல்வி ஏற்பட்டது.

தென்ஆப்பிரிக்க சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டது இல்லை. ஆனால் நமது பவுலர்கள் 300 ரன் வரை கொடுத்தது ஏமாற்றமே. முகமது ஷமி மட்டுமே நேர்த்தியுடன் வீசினார். உமேஷ் யாதவ், இஷாந்த்சர்மா தங்களை நிலை நிறுத்த முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமே.

சமீபத்தில் பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தான் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதால்தான் இந்த வெற்றி கிடைத்தது.

ஸ்டெயின் பந்தை இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

கவாஸ்கரின் பேட்ஸ்மென்கள் மீதான ஆதரவை எதிர்த்து சில கேள்விகள்:

webdunia
FILE
பேட்ஸ்மென்கள் தடுமாறுவார்கள் என்பது தெரிந்ததே என்றால் ஏன் இந்த பேட்ஸ்மென்களை அனுப்பவேண்டும்?

ஓரளவுக்கு நிலைத்து ஆடக்கூடிய புஜாராவை ஒருநாள் அணியில் தேர்வு செய்யாதது ஏன்?

கோலி, ரோகித் சர்மா, ரெய்னா, யுவ்ராஜ் ஆகியோரது ஸ்பான்சர்களால் கல்லாக் கட்ட முடியாது போகுமே என்ற பெரும் கவலை பிசிசிஐ-க்கு இருக்கிறதே அதைபற்றி ஏன் கவாஸ்கர் தாக்கிப்பேசுவதில்லை?

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக நல்ல பிட்சைப் போட்டு விளையாடியிருந்தால் மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் பாக்னர் வேகத்தை ஓரளவுக்கு கையாண்டு தயாராகியிருக்கலாமே? சொத்தைப் பிட்சைப் போட்டு பவுலர்களை காலி செய்தது யார்? இது குறித்து தோனி வெளிப்படையாக பேசியது கவாஸ்கருக்குத் தெரியாதா?

சங்கர் கனேஷ் பாராட்டு விழாவுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் 5 நிமிடம் தலை காட்டிவிட்டுப் போவார் கைதட்டல்கள், மக்கள் எதிர்பார்ப்பு எல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் மீது கவனக்குவிப்பு பெறும் என்று தெரிந்ததுதான்! அதுபோல் இந்திய அணி ஏதோ விஐபி போல் எந்த வித தயாரிப்பும் இல்லாமல் நேராக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போல் கிரிக்கெட் மைதானத்திற்குள் சென்றால் தென் ஆப்பிரிக்கா ஆ...வென்று வேடிக்கைப் பார்க்க சங்கர் கணேஷா என்ன?

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஹரூன் லோர்கட்டை ஏன் நியமித்தீர்கள் என்று இங்கிருந்து பாலிடிக்ஸ் செய்து அதன் முழு சூட்டையும் தோனி முதல் பிரஸ் மீட்டிலேயே எதிர்கொள்ளச் செய்தது யார்?

அந்த அணி அவ்வளவு தீவிரமாக ஆடக்கூடிய அணி அல்ல. வெற்றி பெறும் நிலையிலிருந்து தோல்வியடையும் அணியாகத்தான் தென் ஆப்பிரிக்கா இருந்துள்ளது. அந்த அணிக்கு இவ்வளவு வெறி வரக்காரணம் பிசிசிஐயின் செயல்பாடுதானே? இந்திய அணியை அவர்கள் துவம்சம் செய்யாவிட்டால் அங்கிருக்கும் செய்தி ஊடகங்களை ஸ்மித்தும், டிவிலியர்ஸும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

இவ்வளவு பின்னணிக் காரணங்கள் இருக்கும்போது பந்து வீச்சு சரியில்லை என்று ஒரு சொத்தை காரணத்தைக் கூறி பவுலர்களை பலி கடா ஆக்குவது அனுபவமிக்க சுனில் கவாஸ்கருக்கு உகந்ததுதானா?

Share this Story:

Follow Webdunia tamil