Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் திராவிடிடம் கடுமையாக எதுவும் கூறவில்லை - கம்பீர்

நான் திராவிடிடம் கடுமையாக எதுவும் கூறவில்லை - கம்பீர்
, ஞாயிறு, 5 மே 2013 (16:26 IST)
கவுதம் கம்பீரின் அட்டகாசம் நேற்றும் தொடர்ந்தது. இந்தியாவின் உலகம் மதிக்கும் சிறந்த கிரிக்கெட் ஆளுமையான திராவிடிடமும் தனது வாய்ச்சாலத்தைக் காட்டியுள்ளார் கம்பீர். ஆனாலும் தான் எதுவும் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்கவில்லை, திராவிடை நான் மிகவும் மதிக்கிறேன், என்று சப்பைக் கட்டும் கட்டியுள்ளார் கம்பீர்.

ஏற்கனவே வீரத் கோலி அவுட் ஆகிச் சென்றபோது ஏதோ வார்த்தையை விட்டு அவர் கோபமடைந்தவுடன் அவரைத் தாக்குவது போல் மைதானத்தில் அசிங்கம் செய்த கம்பீர் நேற்று மதிக்கத்தக்க திராவிடம் கூட வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கம்பீரி மீதான மதிப்பு தற்போது மேலும் தரம் தாழ்ந்துள்ளது.

நெற்றைய கொல்கட்டா, ராயல்ஸ் போட்டியின் 5வது ஓவரில் ஆஸ்ட்ரேலிய வீரர், ராயல்ஸ் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கொல்கட்டா வீரர் பிஸ்லா பேட் செய்தபோது பந்தை பிஸ்லா மீது வீசுவேன் என்பது போல் வாட்சன் செய்கை செய்ய இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திராவிட் உடனே தலையிட்டு பிஸ்லாவை கூலாக இருக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் வாட்சனை அடக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. எதிர்முனையில் பேட் செய்த கம்பீர் உடனே வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளார்.

அடுத்த ஓவரில் கம்பீர் வாட்சன் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். பெவிலியனுக்கு போகவேண்டிய கம்பீர் மீண்டும் திராவிடிடம் ஒரு சில வார்த்தைகளை ஏவி விட்டுச் சென்றார். இதுதான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

FILE
ஆனால் கம்பீர் இது குறித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். "அனைவரும் தவறாக புரிந்து கொண்டீர்கள், திராவிடுடன் எந்த ஒரு கடினமான வார்த்தைகளையும் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. நான் எப்போதும் அவரை மதிப்பவன், எனவே சர்ச்சைகளை உருவாக்காதீர்கள்' என்றார் கம்பீர்.

நாம் எப்பவுமே சூடாக, பரபரப்பாக ஏதாவது இருக்கிறதா என்றே பார்த்துப் பழகிவிட்டோம், ஆனால் எனக்கும் திராவிடுக்கும் இடையே எதுவும் நடைபெறவில்லை.

ஆனாலும் இந்திய அணியின் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான ரவீந்தர ஜடேஜா தனது தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் திராவிடை கம்பீரை தாக்கியுள்ளார்.

"கம்பீர் நீங்கள் போட்டியை வென்றிருக்கலாம் ஆனால் மரியாதையை இழந்து விட்டீர்கள். இழந்த மரியாதையை மீண்டும் நீங்கள் பெற முடியாது" என்று டுவீட் செய்துள்ளார் ஜடேஜா.

மேலும் அவர் ட்வீட்கையில், "கோலி இவரை விட எவ்வளவோ மேல், அவருக்கு மூத்த வீரர்களை மதிக்கத் தெரிந்துள்ளது" என்று வேறு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளார்.

பிஸ்லாவையும் விட்டு வைக்கவில்லை ஜடேஜா, "பந்தை கேட்ச் பிடிக்கக்கூட முடியாத ஒரு வீரர், திராவிட் போன்ற கிரிக்கெட் ஜெண்டில்மேனை ஸ்லெட்ஜ் செய்கிறார்" என்று சாடியுள்ளார்.

கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் ஆட்டமென்றால் திராவிட் ஒரு ஜென்டில்மென் என்றும் திராவிடை ஆதரித்து எழுதியுள்ளார் ஜடேஜா.

ஷேன் வார்ன், இவரே ஆன் ஃபீல்டில் ஒரு மோசமான நடத்தை வீரர் ஆவார். அவர் கம்பீரை வர்ணித்திருப்பது கம்பீரின் கால நேரக்கொடுமை என்றாலும் கம்பீருக்கும் இது தேவைதான், வார்ன் கூறியது இதோ: கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு கேள்வி, பூமியில் எரிச்சலூட்டும் 3 கிரீக்கெட் வீரர்களில் கம்பீரும் ஒருவரோ?" என்று நையாண்டி செய்துள்ளார்.

ஆனாலும் நிச்சயம் எரிச்சலூட்டும் 3 வீரர்களில் ஷேன் வார்ன் முதலிடம் பிடிப்பார் என்றே நாம் கூறலாம்.

ஐபிஎல். கிரிக்கெட்டில் புரளும் பணம், வீரர்களிடையே பொறாமையையும், வயிற்றெரிச்சலையும் கிளப்பி வருகிறது. பணம் செய்யும் திருவிளையாடல்தான் எதிரில் இருப்பவர் யார் என்பதை கூட மறைத்து விடுகிறது.

ஐபிஎல். கிரிக்கெட் நிர்வாகம் வீரர்கள் வசைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது இது போன்று ஃபீல்டில் அசிங்கமாக அடித்துக் கொள்வது ஒருவருக்கொருவர் மரியாதையில்லாமல் பேசுவது நடந்து கொள்வது ஐபிஎல். ரியால்டி ஷோவின் ஒரு பகுதியா? என்பது ஆய்வுக்குரிய ஒன்றுதான்.

Share this Story:

Follow Webdunia tamil