Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேவாக் போல் பயமில்லாமல் ஆடும் ஷிகர் தவான்!

சேவாக் போல் பயமில்லாமல் ஆடும் ஷிகர் தவான்!
, வெள்ளி, 7 ஜூன் 2013 (15:46 IST)
FILE
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி மாதம் மொகாலியில் தன் அறிமுக டெஸ்டிலேயே அதிவேக சதம் எடுத்து உலக சாதன் புரிந்த ஷிகார் தவான், அதற்கு அடுத்த சர்வதேச கிரிக்கெட் போட்டியான நேற்று மீண்டும் தனது பயமற்ற கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சேவாக் அளவுக்கு இவரிடம் 'ரிபிளெக்ஸ்' கை-கண் ஒத்திசைவு இல்லாமல் இருக்கலாம் ஆனால் தைரியம் சேவாகுக்குச் சொந்தமானது தவானிடம் உள்ளது.

நேற்று முதலில் பெவிலியனில் இருந்து வரும்போது முழங்கை கப்பை மறந்து வைத்து விட்டு வந்து மைதானத்திலிருந்து கேட்டார். கொஞ்சம் பதட்டத்துடன் இருந்ததாக தெரிந்தது. ஆனால் அதன் பிறகு அவர் நிதானமாக செட்டில் ஆனார். பயிற்சி ஆட்டம் வேறு அவர் சோபிக்காத ஆட்டமாக இருந்தது.

ரியான் மெக்லாரன் ஷாட் பிட்ச் டெஸ்ட் வைத்தார். ரோகித், தவான் இருவரும் அடி வாங்கினர் ஆனாலும் தளரவில்லை. அதன் பிறகு இருவருமே புல் ஆட தொடங்கினர். குறிப்பாக தவான் புல், ஹுக் ஷாட்டில் தாக்கத் இருந்தது. இருவரும் சத ரன் எண்ணிக்கையை எட்டினர். துவக்க விக்கெட்டுக்காக சச்சின், சேவாக் கூட்டணி ஹேமில்டனில் 2009ஆம் ஆண்டு எடுத்த துவக்க சத கூட்டணிக்குப் பிறகு நேற்றுதான் இந்தியா துவக்கத்தில் 100 ரன்களை எடுத்தது.

ராபின் பீட்டர்சனை மேலேறி வந்து அடித்தார். கிளீன்வெல்ட்டை ஒன்றுமில்லாமல் செய்தார் தவான். அவரை எழுத்தார், புல் செய்தார், கட் செய்தார், மேலேறி வந்து லாஃப்ட் செய்தார்.

தவானின் திறமையையும் பொறுமையையும் வேறு விதமாக டெஸ்ட் செய்ய வேண்டிய தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் உதவியில்லாத பிட்சில் அனாவசியமாக ஷாட் பிட்ச் பந்துகளை வீசினர்.

பந்து வீச்சாளர் ஓடி வரும்போதே இவர் நடந்து வரும் தைரியத்தின் மூலம் பவுலர் ஒன்று இவரை தாக்கவேண்டும் அல்லது லைனை மாற்றவேண்டும் என்று அவர்களை தீவிர நிலைக்குத் தள்ளுகிறார் தவான். இது ஒரு அபாரமான திறமையாகும்.

94 ரன்களில் இருந்தபோது கிளீன்வெல்ட்டின் எழும்பிய பந்தை கல்லி, பாயிண்டிற்கு இடையே அழகாக ஆடி பவுண்டரி அடித்தது தவானின் கிளாஸை அறிவிப்பதாக இருந்தது.

எதிரணி கேப்டன் டிவிலியர்ஸே தவான் மிகச்சிறந்த வீரர் அனைத்து ஸ்ட்ரோக்குகளும் அவர் கைவசம் உள்ளன என்று பாரட்டியுள்ளார்.

தவான் வெற்றியின் தாரக மந்திரம் என்ன? இதோ அவரே கூறுகிறார்: "எதிர் வீரர் பேட் செய்வதை எஞ்ஜாய் செய்யவேண்டும், ரன் ஓடுவதில் மகிழ்ச்சியுடன் ஆர்வம் வேண்டும், அழுத்தத்திலிருந்து விடுபடுவதும் ஒரு சந்தோஷம்தான்" என்கிறார் தவான்.

ஆட்டம் வென்றவுடன் அனைவரும் தவானை நோக்கிச் சென்று கை கொடுத்தது டிரஸ்ஸிங் ரூமில் தவானிடத்தில் இந்திய வீரர்களுக்கு இருக்கும் மரியாதையைக் காட்டியது.

Share this Story:

Follow Webdunia tamil