Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூதாட்டம் நடந்தால்தான் என்ன? ஐபிஎல்.மோகம் குறைகிறதா?

சூதாட்டம் நடந்தால்தான் என்ன? ஐபிஎல்.மோகம் குறைகிறதா?
, சனி, 18 மே 2013 (15:54 IST)
FILE
ஐபிஎல். கிரிக்கெட்டை முன் வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. கடைசியாக 2009 சூதாட்ட புகாரில் சிக்கி சச்பெண்ட் செய்யப்பட்ட 4 வீரர்கள். இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட 3 பேர் சிக்கியுள்ளமை, ஆகியன ஐபிஎல். என்ற கிரிக்கெட்டின் இமேஜின் மீது கரி பூசினாலும் ரசிகர்களின் பொழுது போக்கு மனோநிலையில் எந்த வித மாறுதலையும் ஏற்படுத்தவில்லை.

சூதாட்டப்புகார் எழுநத, ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட, அன்றே நடைபெற்ற போட்டியில் ஏகப்பட்ட கூட்டம், ரசிகர்களின் சுரணையற்ற ஆரவாரம்! வர்ணனையாளர்கள் வழக்கம்போல் சீரியசாக கிரிக்கெட் பகுப்பாய்வில் ஈடுபட்டது அனைத்தும் மிகவும் அருவருப்பாகவே அமைந்தன. ஆனால் ரசிகர்களுக்கு, மக்களுக்கு? சுரணை மழுங்கடிக்கப்பட்டது.

நேற்றைய சன் ரைசர்ஸ் போட்டியில் ஒரேயொரு ஒல்லியான பதின்ம வயது நபர் ஒருவர் ஸ்ரீசாந்திற்கு எதிராக போஸ்டரைக் காண்பித்தார். பிறகு அவரும் ஆரவாரக் கும்பலுடன் ஐக்கியமானார்.

சன் நியூஸ் சானலில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பாஸ்கி, நானி, பிரசாத் கலந்து கொண்டு உரையாடும் கலகலப்பு நிகழ்ச்சியில் 'ஐபிஎல் சூதாட்டம்' ஸ்பாட் பிக்சிங் என்ற வார்த்தைகூட வெளிவரவில்லை. ஏதேதோ செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கிரிக்கெட்டை சும்மா ஜாலியாக ரசிக்கவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது.

முதலில் ஒரு போட்டி பிக்சிங் செய்த போட்டியா, யார் வெற்றி பெறவேண்டும் என்பது முதலிலேயே தீர்மானிக்கப்போட்டியா என்ற இடையூறுகள் இல்லாமல், சந்தேகமற எப்படி ஐயா கிரிக்கெட்டை 'ஜாலியாக எஞ்ஜாய் செய்ய முடியும்?' இது நாணி அவர்களின் கருத்து மட்டுமல்ல. பொதுவாக ரசிகர்களின் பொழுதுபோக்கு வக்ர மோகத்தின் ஒரு தெறிப்பே நாணியின் கருத்தும். இதில் என்ன விமர்சனச் சிந்தனை வந்துவிடப்போகிறது?

பல மக்களின் தலைவிதியைத் தீரமானிக்கும் நாட்டின் தேர்தல்களே ஏதோ ஒரு மிகப்பெரிய தொலைக்காட்சி பொழுது போக்காகவும் இடங்கள், தொகுதிகள் ஆகியவற்றின் வெற்றி எண்ணிக்கை என்ற நம்பர் பித்தும் பிடிக்க வைக்கப்படுகிறது. ஐபிஎல். நம்பர் கேம், தேர்தல் நம்பர் கேம்! அனைத்தையும் தீர்மானிப்பது தொலைக்காட்சி பிம்பம், மைதானத்தில் நேரில் சென்று கிரிக்கெட் வீரர்களை நேரடியாக தரிசனம் செய்யும் ஆளுமை வழிபாட்டு மோகம் இவ்வாறு மக்கள் மனோநிலை இருக்கும்போது சூதாட்டம், ஊழல் என்பது பற்றியெல்லாம் இந்த மந்தைக்கு என்ன பிரக்ஞை வந்து விடப்போகிறது.

நாணி கூறுவது போல் இன்று இந்தப் பிரச்சனை நாளை வேறொரு பிரச்சனை வந்தால் இதனை மறந்து விடுவார்கள். ஆனால் நாணி இந்தப் போக்கை வேதனை தருவதாகக் கருதுவதில்லை. அது அப்படி என்றால் அப்படித்தான்! அதுதான் வாழ்க்கை, எது எப்படியிருந்தால் என்ன? எவன் செத்தால் என்ன வாழ்ந்தால் என்ன? லைஃப் இச் கோயிங் ஆன்... எனி திங் கோஸ்... என்ற ஒரு விதமான மத்தியதர அல்லது உயர் மத்தியதர கவலையற்ற வாழ்வு கொடுக்கும் அசாத்திய பாதுகாப்பு உணர்விலிருந்து வெளியே வரும் வார்த்தைகள்தான் இந்த லைஃபை எஞ்ஜாய் பண்ணுங்க, கிரிக்கெட்டை எஞ்ஜாய் பண்ணுங்க என்பதெல்லாம்!

webdunia
FILE
தவறுகளை ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் விரக்தியுடன் ஏற்றுக் கொண்டு வெறுப்பில் வாழ்க்கையைத் தொடரும் ஒரு மனோ நிலை போய், இன்றைய உலகமயமாதல் உருவாக்கியுள்ள புதிய பிந்தேசிய-மத்தியதரவர்க்க-மேட்டுக் குடி மனோநிலை எந்த வித ஊழலையும், அக்கிரமத்தையும் கண்டுக்காதீங்க எஞ்ஜாய் பண்ணுங்க என்பதெல்லாம்! இதற்காகத்தான் ஜக்கி வாசுதேவ் இருக்கிறார். வாழும் கலை ஓதும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இருக்கிறார். இதி ஸ்ரீசாந்த் விவகாரம் என்ன ஆகிவிடப்போகிறது?

மக்களின் சுய-விமர்சனஸிந்தனைகளுக்கான சாத்தியப்பாடுகளை மழுங்கடித்து ஒரு விதமான பரபரப்பு மனோநிலையை ஏற்படுத்தி பிறகு அதனையும் மழுங்கச் செய்து பிம்பங்களின் தொடர் வர்சைகளை திரையில் காண அதன் முன் வாய் மூடி மௌனியாக பார்வையாளர்களை அமர வைத்து சிந்தனை என்ற ஆற்றல் உள்ள தனி மனிதர்களை மந்தைகளாக ஆக்குகிறது இன்றைய ஊடகம்.

இண்டெர்னெட், தொலைக்காட்சி, ஃபேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் என்று மின்னணு ஊடகங்களின் ஜீவிகளாகிவிட்டோம் நாம்! இதிலிருந்து மீண்டு அன்னியமாகி விமர்சனச் சிந்தனைகளை வளர்த்தெடுக்க மற்று சிந்தனைகளை, தத்துவங்களை கற்க முன்வரவேண்டும்.

அதற்கான சூழல்கள் அமைத்துத் தரப்படாத நிலையில் ஐபிஎல்-ஐ ரசிக்கும் மனோ நிலை, அதாவது வாழ்க்கையை எஞ்ஜாய் செய்யும் மனோ நிலையே, எருமைமாட்டு மனோ நிலையே நமக்கு சாத்தியமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil