Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூதாட்டக் கேள்வியா? நெக்ஸ்ட் க்வெஸ்டின் பிளீஸ்! தோனியை இடைமறித்த பாபா!

சூதாட்டக் கேள்வியா? நெக்ஸ்ட் க்வெஸ்டின் பிளீஸ்! தோனியை இடைமறித்த பாபா!
, வியாழன், 30 மே 2013 (17:09 IST)
FILE
தோனி எஸ்கேப், மௌனம் என்றெல்லாம் நாம் ஐபிஎல். கிரிக்கெட் தொடரின்போதே எழுதினோம். ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்குக் கிளம்பிப் போகும் முன்பு ஒரு 16 அல்லது 17 நிமிடங்கள் மீடியாவுடன் தோனி உரையாட நேரிட்டது. ஆனால் ஸ்பாட் பிக்சிங், வின்டூ தாரா சிங் பற்றி கேள்வி எழுப்பியபோதெல்லாம் பிசிசிஐ நியமித்த மீடியா மேலாளர் ஆர். என்.பாபா என்பவர் சாமர்த்தியமாக அடுத்த கேள்வி பிளீஸ் என்று நழுவல் வித்தைக் காண்பித்துள்ளார்.

உரையாடல் தொடங்கும் முன்பே பாபா தடை விதிப்பு அறிவிப்பு செய்துள்ளார் கேள்விகள் சாம்பியன்ஸ் டிராபி தொடர்புடையாக மட்டுமே இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

ஏகப்பட்ட கைதுகள், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக சூதாட்ட செய்திகள் குவிகின்றன. தோனிக்கு பதில் அளிக்கவேண்டிய கடமை உள்ளது. ஆனால் அவரை இடைமறித்து அடுத்த கேள்வி என்று பாபா குறுக்கே புகுந்துள்ளார்.

அப்படி என்ன கேட்டது மீடியா?

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இதோ: ஸ்பாட் பிக்சிங் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சாம்பியன்ஸ் டிராபி செல்லும் வீரர்களின் மீது இந்த சூதாட்டம் விவகாரம் தாக்கம் செலுத்துமா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற முறையில் நீங்கள் இன்னமும் வாயைத் திறக்காமல் இருப்பது ஏன்?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் களட்தில் இதுபோன்ற விவகாரங்கள் நடைபெறாது என்று இந்திய ரசிகர்களுக்கு உத்திரவாதம் அளிப்பீர்களா?

விண்டூ தாரா சிங்கை உங்களுக்கு நெருக்கமாக தெரியுமா?

இதுதான் அந்த 4 கேள்விகள். ஆனால் எல்லா கேள்விகளுக்கும் பாபா அடுத்த கேள்வி பிளீஸ் என்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த கேள்விகள் கேட்கப்படும்போது தோனியின் முகம் வெளுத்துப் போனதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

கடைசியில் தந்திரமாக சுற்றிவளைத்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது: அதாவது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் கூடுதல் பொறுப்புடன் இந்திய அணி செயல்படுமா என்று கேட்டதற்கு தோனி பதில் அளித்துள்ளார்

கிரிக்கெட் வீரர்களாக எங்களுக்கு எப்பவுமே கூடுதல் பொறுப்புணர்வு உண்டு. எங்கள் மீது பொறுப்பு உள்ளது. நாங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம் என்று நம்புகிறேன்என்றார்.

இந்திய அணியின் கேப்டன் அருகில் அமர்ந்து கொண்டு வாயைத் திறக்காமல் செய்ய ஒரு மீடியா மேனேஜரை ஸ்ரீனிவாசன் தலைமை பிசிசிஐ அனுப்புகிறது என்றால் பிசிசிஐ அமைத்துள்ள ஸ்பாட்பிக்சிங் ஊழலை விசாரிக்கும் 3 பேர் குழுவின் விசாரணை நேர்மையாக நடக்கும் என்று எப்படி நம்புவது என்பதே நம் கேள்வி.

இதில் தோனி, சச்சின் போன்ற வீரர்கள் செய்யக்கூடியது என்னவென்றால். தங்களைச் சுற்றி, தாங்கள் மிகவும் நேசிக்கும், தாங்கள் அதிகம் பணம் சம்பாதிக்கும் ஒரு துறையில், இவ்வளவு அசிங்கங்கள் நடக்கிறது எனும்போது ஐபிஎல். கிரிக்கெட்டில் இனி விளையாடமாடோம் என்று கூறுவதே. சச்சின் செய்தாரே என்று கூற முடியாது. அடுத்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் ஆலோசகராகவோ, அல்லது ஏதாவது ஒரு வழியிலோ மீண்டும் நியமிக்கப்படலாம். யார் கண்டது?

ஐகான் வீரர்களை வைத்துத்தான் இவர்களின் விளையாட்டு நடக்கிறது. டாப் வீரர்கள் விளையாட மறுத்தாலோ, அல்லது அயல் நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களை ஐபிஎல். கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்ற முடிவுகளை எட்டினாலோ ஐபிஎல் பிசுபிசுத்துவிடும்.

எனவே இதில் உண்மை வெளியாகிறதா என்று பார்ப்பது அபத்தம். ஒரு உண்மை கூட வெளியாகாது என்பதில் தெளிவாக இருக்கலாம். அதுவரை ஹேஷ்யங்களை வெளியிட்டு, மீடியா இமேஜ் புகழ் விரும்பிகளான டெல்லி போலீஸ் மும்பை போலீஸ் கூறும் செய்திகளை வாக்குமூலங்கள் என்று நம்பி செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள். ஊடகங்களுக்குக்கொண்டாட்டம்தான்! ஊடகங்கள் இருக்கும்வரை போலீஸுக்கும் கொண்டாட்டம்தான். ஸ்ரீநிவாசனுக்கு ஒரு தற்காலிக பிரச்சனை, ஒரு சிறு தொந்தரவு அவ்வளவுதான்!

அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்றால் வீரர்கள் தார்மீக முடிவெடுத்து இனி ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்கமாட்டோம் என்று அறிவித்தால்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil