Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐசிசியை பிடித்த மூவர் கூட்டணி! காசு பணம் துட்டு மணி மணி...

ஐசிசியை பிடித்த மூவர் கூட்டணி! காசு பணம் துட்டு மணி மணி...
, வியாழன், 30 ஜனவரி 2014 (14:14 IST)
ஐசிசி. வணிக நடவடிக்கைகளை முற்றிலும் கவனிக்க, அதாவது ஐசிசியையே தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தது பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
FILE

உலகில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களில் அதிக பணம் புரள்வது இந்தியா, இங்கிலாந்து ஆஸ்ட்ரேலியா ஆகிய நாடுகளிலேயே. மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிகளில் எதுவும் டப்பு பேர வில்லையாம்.

இதனால் இந்த மூவர் கூட்டணிதான் இனி கிரிக்கெட்டை நடத்துமாம். கிரிக்கெட்டில் ஐசிசிக்கு வரும் வருவாயில் 80% இந்தியா மூலமகா பல்கிப்பெருகுகிறதாம். இதனால் இந்தியா தனக்கு மேஜர் பங்கு வேண்டும் என்று கூறிவந்தது.

இதனைப்பயன்படுத்திக் கொண்ட ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் எங்கு தன் பண பலம் ஆசை வார்த்தைகளினால் மற்ற உறுப்பு கிரிக்கெட் வாரியங்களையும் பிசிசிஐ தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டுவிடுமோ என்ற அச்சத்தில் பிசிசிஐ-யையும் கூட இணைத்துக் கொண்டு கிரிக்கெட்டை நாங்கள் தான் நடத்துவோம் என்று மூவர் கூட்டணி முடிவு செய்து அதற்கான வரைவு முன்மொழிவு பிரதியையும் ஐசிசியிடம் கையளித்துள்ளனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு வந்தாலும் வங்கதேசம் மட்டும் போர்க்கொடி தூக்கியது. காரணம் தங்களது டெஸ்ட் அந்தஸ்து பறிக்கப்படுமோ என்ற அச்சம் அதற்கு! நியாயம்தானே. இதனால் அதனை உறுதி செய்து கொண்டு ஆதரித்து விடும் என்றே தோன்றுகிறது. வரைவு முன்மொழிவுக்கு இன்னும் ஒரு வாக்குதான் தேவை அதனை மூவர் கூட்டணி வென்று விடும் என்றே தெரிகிறது.

மேலும் ஐசிசி போட்டிகளான சாம்பியன்ஸ் டிராபி, உலகக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளை தங்களை கலந்தாலோசிக்காமல் எதையும் ஐசிசி செய்து விடக்கூடாது என்று பிசிசிஐ கூறியுள்ளது. அப்படி தங்களை ஆலோசிக்காமல் ஏதாவது செய்தால் ஐசிசி போட்டிகளை புறக்கணிப்போம் என்று பிசிசிஐ மிரட்டியுள்ளதக தெரிகிறது.
webdunia
FILE

இதனால் இந்த மூவர் கூட்டணி ஃபார்ம் ஆகியுள்ளது. மேலும் எதிர்கால கிரிக்கெட் பயணத்திட்டங்களில் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான பேரங்களை இந்தியா தங்களிடம் விட்டுவிடவேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்துள்ளது.

காரணம் அப்போதுதான் எந்த அணியையும் இங்கு வரவழைத்து இந்த வெயிலில் 4 டெஸ்ட், 7 ஒருநாள் என்று காயடிக்கலாம் அதே வேளையில் அயல்நாடுகளில் எப்போதும் தோற்றுக் கொண்டிருக்கும் நமது அணியை சிறு தொடர்களின் மூலம் காப்பற்றிக் கொள்ளலாம்.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா தங்களிடையே இப்போது அதிகமாக ஆடி வருகிறது. இது இன்னும் உக்கரமடையும். ஏற்கனவே பாகிஸ்தான் அணி ஆஸ்ட்ரேலியா சென்று ஆண்டுகள் கழிந்துள்ளன. வங்கதேச அணியை இந்தியா இருதர்ப்பு தொடருக்கு அழைத்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகிறது. முன்பு ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்தெல்லாம் சென்ற வங்கதேச அணி தற்போது ஜிம்பாவே, இலங்கை அணிகளுடன் மட்டும் விளையாடி வருகிறது.

ஐசிசி வருவாய் இந்தியாவினால்தான் அதிகம் பெருகுகிறது என்பது உண்மையாக இருந்தாலும் பதவியும், அதிகாரமும் வரும்போது பணிவும், பொறுப்பும் வரவேண்டும். அந்த பணத்தை கிரிக்கெட் ஆட்டத்தை வளர்க்க பயன்படுத்தவேண்டும்.

நிறைய அணிகளிலிருந்து பலதரப்பட்ட வீரர்கள் வந்து அனைவரும் டாப் அணிகளுடன் மோதுவதுதானே கிரிக்கெட்டின் சுவாரசியம்! ஆனால் இந்த மூவர் கூட்டணி அப்படியெல்லாம் யோசிக்கவில்லை. நிறைய கிரிக்கெட் தொடர்களில் வருவாய் வருவதில்லை எனவே அதனை என்ன செய்யலாம், ஒழித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ள ஒப்பந்தம் ஆகும் இது, இதற்கு மற்ற வாரியங்கள் ஏன் ஆதரவு தெரிவிக்கின்றன என்பது புரியவில்லை.

ஜார்ஜ் ஆர்வெலின் மிகப்புழபெற்ற நாவலான 'விலங்குப் பண்ணை' என்ற ஸ்டாலினிய கம்யூனிஸத்தை கடுமையாக நையாண்டி செய்த அந்த நாவலில் ஒரு வரி வரும் "அனைவரும் சமமானவர்களே, இருப்பினும், சிலர் அதிசமன் படைத்தவர்கள்." இதுதான் இந்த மூவர் கூட்டணியின் தாத்பரியம்.

தென் ஆப்பிரிக்கா இந்தியாவை ஆதரிக்கும் ஏனெனில் எதிர்த்து இப்போது பட்ட அடியை இன்னொரு முறை அந்த நாட்டு வாரியம் எதிர்கொள்ள விரும்பாது. 3 டெஸ்ட் 7 ஒருநாள் 2 இருபது ஓவர் தொடரை 2 டெஸ்ட் 3 ஒருநாள் என்று குறைத்ததே பிசிசிஐ.

அதுதான் மற்ற வாரியங்களுக்கும் நடக்கும் இதனால் அவர்கள் பயந்து போய் இந்த முன்மொழிவுகளுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இந்தியாவின் அதிகார பலத்தை வைத்து ஆஸ்ட்ரேலியாவும், இங்கிலாந்தும் இந்த முன்மொழிவை தயார் செய்துள்ளது.

ஒருகாலத்தில் இந்தியா வந்து விளையாட உத்தரவாதத் தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்கவேண்டும். அப்படியிருந்த நிலை என்று தலைகீழாக மாறிவிட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பணத்தை வைத்துக் கொண்டு அதிகாரம் செய்து வருகிறது. மேலும் பணம், பதவி, செல்வாக்கு என்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஐசிசி-யும் இந்தப் பொறியில் சிக்கிவிட்டது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil