Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பகவத் கீதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன தெரியுமா...?

பகவத் கீதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன தெரியுமா...?
"பகவத் கீதை" என்பதற்கு "கடவுளின் கீதம்" என அர்த்தமாகும். உலகத்தில் நாம் இதுவரை கேட்டு படித்துள்ள ஆன்மீக போதனைகளில் சிறந்த  நூல் இதுவே.
* எதுவும் நிரந்தரம் இல்லை - இந்த பிரபஞ்சத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை, அது போலவே உங்கள் உடலும். எனவே உங்கள் உடலைக்  கொண்டு உங்களை அடையாளப்படுத்துவது தேவையற்றது. உங்கள் நித்திய ஆத்மாவைத் தவிர அனைத்துமே நிலையற்றது. நிலையற்றப் பொருட்களில் உங்கள் நம்பிக்கையை வைப்பது பயனற்றது. அவை விரைவில் அல்லது பின்னர் அழிந்து போகும் தன்மை கொண்டவை.  மேலும் பற்றுதல் துன்பத்தையே தருகிறது.
 
* செயலற்று இருப்பது முட்டாள் தனம் - எழுதப்பட்டுள்ள உலகக் கடமைகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒருவர் ஏமாற்றப்படுவார். தனது பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்காமல், ஒருவர் செயலாற்றும் போது உண்மையான விடுதலை சாத்தியமாகிறது.
 
* முடிவு பற்றி கவலைப்படாத கடின உழைப்பு வேண்டும் - முடிவைப் பற்றிய கவலைகளை ஒதுக்கி வைக்கும் போது, நீங்கள் கடினமாக  உழைக்க முடியும் மற்றும், விளைவின் தன்மை குறித்த கவலை இல்லாமல் சந்தோஷமாக இருக்க முடியும்.
 
* ஆசையை வெல்லுங்கள் - ஒரு ஸ்திரமான மனதாலேயே ஆசையின் தன்மை மற்றும் அமைப்பை புரிந்து கொள்ள முடியும். மேலும், இது ஆசையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாக இருக்கும்.
 
* சுயநலம் உங்கள் ஞானத்தை மறைக்கும் - மனமானது சுயநலத்தில் அமிழ்ந்து இருப்பது, ஒரு கண்ணாடியானது மூடுபனி அல்லது தூசியால் மூடப்பட்டிருப்பதற்கு ஒப்பானதாகும். சுயநலத்தை ஒதுக்கி வைக்கும் போது மனதில் தெளிவு, நம்பிக்கை நிலவுகிறது.
 
* சமநிலைத்தன்மை வேண்டும் - மிக அதிகமான அல்லது மிக குறைவான எதுவும், வாழ்கையில் சமநிலையற்றத் தன்மையை உருவாக்கும்.  எனவே உணவு, தூக்கம், உடல் இன்பம் எதுவாயினும் சமநிலை அவசியம்.
 
* சினம் உங்களை வஞ்சிக்கும் - சினம் உங்களை வஞ்சிக்கும். கோபம் உங்களை குழப்பமடையச் செய்யும். கோபத்துடன் செய்யும் செயல்கள் பயனற்றுப் போகும். ஒருவர் கோபமாக இருக்கும் போது மனமானது, தர்க்கம் மற்றும் காரணங்களை இழக்கிறது. சினம் ஒரு மிகப்பெரிய  மனிதரைக் கூட வீழ்த்தும்.
 
* கடவுள் உங்களுக்குள்ளே இருக்கிறார் - ஒரு உச்ச சக்தியானது பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும், உயிருள்ள மற்றும் உயிரற்ற  பொருள்களிலும் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா...?